Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    இராவணனின் வாகனம் கிளிநொச்சியில் கண்டுபிடிக்கப்பட்டதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-03-30
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இராவணனின் வாகனம் கிளிநொச்சியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது என ஒரு புகைப்பட தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானத

    INTRO :
    இராவணனின் வாகனம் கிளிநொச்சியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது என ஒரு புகைப்பட தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ கிளிநொச்சியில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாம்.

    அத்தோடு இவை இராவணனின் பயன்படுத்தியாக கருதப்படுகிறது. 

    இவை இராவணன் பயன்படுத்திய புட்பக விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று கருத்படுகிறதாம்.

    இதனை ஆராய்வதற்காக ஜப்பானிய தொல்பொருள்  ஆய்வாளர்கள் வருகிறாராகளாம். 

    அவர்களோடு இலங்கை தொல்பொருள் திணைக்களமும் சிங்கள் தோல்பொருள் ஆய்வாளர்களும் இணைந்து கொள்கிறார்கள்.

    இராவணின் கோட்டையாக இருந்த சிகிரியா சிங்கள மரபுரிமை சின்னமாக மாற்றியது மட்டுமல்லாமல் இராவணன் சிங்கள மன்னன் என்று வரலாற்றை மடை மாற்றிக்  கொண்டு உள்ள சிங்கள பேரினவாதம் அடுத்து என்ன கதை உருவாக்க போகிறதோ? “ என இம் மாதம் 21 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (26.03.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த படங்களை பார்வையிட்ட போது இது AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தின் மூலமாக உருவாக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழ அதனை நாம் AI (செயற்கை நுண்ணறிவு) சரிபார்க்கும் கருவிகள் கொண்டு ஆய்வினை மேற்கொண்டோம்.

    மேலும், இந்த புகைப்படம் தொடர்பில், அதனை உருவாக்கியவர் ஜனக சேனவிரத்ன, தனது பேஸ்புக் குழுவில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இராவணனின் வாகனம் கிளிநொச்சியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது என இணையத்தில் பரவி வருகின்ற புகைப்படம் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தில் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது

    இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:இராவணனின் வாகனம் கிளிநொச்சியில் கண்டுபிடிக்கப்பட்டதா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-03-30

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.