Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    அமெரிக்காவில் பள்ளிவாசலின் கண்ணாடி சுவரை உடைக்கும் காட்சி என பரவும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-02-10
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :அமெரிக்காவில் பள்ளிவாசலின் கண்ணாடி சுவரை உடைக்கும் காட்சி என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்

    INTRO :
    அமெரிக்காவில் பள்ளிவாசலின் கண்ணாடி சுவரை உடைக்கும் காட்சி என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” 

    *அமெரிக்காவில் ஒரு மதவெறியன் ஒரு பள்ளிவாசலின் கண்ணாடி சுவரை உடைக்கிறான் அவன் நிலைமை என்னவென்று பாருங்கள்…  “ என கடந்த மாதம் 26 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (26.01.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது. மேலும் பலர் குறித்த முதியவரை தீட்டி கமெண்டுக்கள் பதிவிட்டுள்ளமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    நாம் முதலில் குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

    குறித்த தேடலின் போது, CureBore என்ற x பக்கம் (டுவிட்டர்), இச்சம்பவம் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி போலந்து நாட்டின் லுப்லினிக் என்ற இடத்தில் நடைபெற்றது என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    இதனை உறுதி செய்யும் விதமாக குறித்த வீடியோவில் உள்ள திகதியும் குறித்த x பதிவில் இருந்த திகதியும் ஒன்றாக உள்ளமை கண்டறிந்தோம்.

    மேலும் நாம் இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி The Sun என்ற சர்வதேச ஊடகத்தில் வைரலாகும் வீடியோ உடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

    குறித்த சம்பவத்தில் உடைக்கப்பட்டது கடை என்பதும் தெரியவருகிறது. இது குறித்து அக்கடையின் உரிமையாளர் கூறுகையில், ‘’இந்த நபர் எனது கடையின் ஜன்னல் கண்ணாடிகளை இரண்டு முறை உடைத்துள்ளார். இரண்டாவது முறை உடைத்துக்கொண்டிருந்த போது அவ்வழியாக நடந்து சென்ற மற்றொரு நபர் பொலிஸாரிடம் தகவல் தெரிவிக்கவே தப்பிப்பதற்காக ஓடிய இந்த நபர் காரில் அடிபட்டு கீழே விழுந்தார்.

    இதில், சிறு காயமடைந்த அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டார்” என்றார்.

    இதுதொடர்பாக வெளியான செய்திகள்… 


    link 1  | Link 2

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், அமெரிக்காவில் பள்ளிவாசலின் கண்ணாடி சுவரை உடைக்கும் காட்சி என பகிரப்படும் வீடியோ போலாந்து நாட்டில் ஒரு கடையின் கண்ணாடியினை உடைக்கும் காட்சி என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:அமெரிக்காவில் பள்ளிவாசலின் கண்ணாடி சுவரை உடைக்கும் காட்சி என பரவும் வீடியோ உண்மையா?

    Written By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-02-10

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.