Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    டோனியிடம் ஆசிர்வாதம் பெற்ற மதீஷ பத்திரன என பரவும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-04-03
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :டோனியிடம் ஆசி பெற்ற மதீஷ பத்திரன என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறி

    INTRO :
    டோனியிடம் ஆசி பெற்ற மதீஷ பத்திரன என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” தனது ஆசானிடம் ஆசி பெற்ற பத்திரன  “ என கடந்த மாதம் 28 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (28.03.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    17 ஆவது முறையாக இடம்பெறும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற போட்டியின் போது, மதீஷ பத்திரன டோனியின் காலில் விழுந்து ஆசி பெற்றதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    நாம் முதலில் குறித்த வீடியோவை நன்கு அவதானித்த போது, அதில் மதீஷ பத்திரன கீழே குனிந்து எதையோ எடுப்பதை போன்று இருந்தமையால் வேறு ஒரு பக்கத்தினால் எடுக்கப்பட்ட வீடியோவை நாம் தேடி ஆய்வினை மேற்கொண்டோம்.

    எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த ஒரு காணொளி எமக்கு கிடைக்கப்பெற்றது. அதில் பத்திரன தலயிடம் ஆசி பெற்றதாக நினைத்தவர்களுக்கு என பதிவிட்டிருந்தார்.

    டோனியின் காலுக்கு அருகில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தும் மார்க்கரை எடுக்க மதீஷ பத்திரன குனிந்துள்ளமை காணக்கிடைத்தது. அந்த வீடியோ மற்றைய பக்கத்தில் எடுக்கும் போது இடையில் கேமரா குறுக்கிடவே அது அவர் ஆசி பெறுவதை போன்று காணப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இந்திய ஊடகங்கள் உண்மை சரிபார்த்து செய்து வெளியிட்டுள்ளமையும் காணக்கிடைத்தது. Link 1 | Link 2

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், டோனியிடம் ஆசிர்வாதம் பெற்ற மதீஷ பத்திரன என பரவும் வீடியோ தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title: டோனியிடம் ஆசிர்வாதம் பெற்ற மதீஷ பத்திரன என பரவும் வீடியோ உண்மையா?

    Fact Check By: S.G.Prabu  

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-04-03

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.