Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    <strong>Newdale யோகட் தயாரிப்பு திகதி குறித்து பரவும் தகவல் உண்மையா?</strong>

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-03-31
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :Newdale யோகட் தயாரிப்பு திகதி குறித்து ஒரு பதிவு  Newdale யோகட் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என

    INTRO :

    Newdale யோகட் தயாரிப்பு திகதி குறித்து ஒரு பதிவு  Newdale யோகட் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “⚠️மக்கள அவதானம் ⚠️

    #Anchor_Newdale

    யோவ் இன்டைக்குத்தான டேட்டு 03/03/2023

    எப்படியா 06/03/2023 டேட்டு வரும் முதல உன்ட சாமான தயாரித்து வெளியிட்ட….❓

    என்னைய்யா உன்ட நியாயம்…❓

    அதுவும் அதிகம் குழந்தைகள் சாப்பிடுர சாப்பாட்டுல இப்படி நீ பூந்து விளையாடுரா…😳

    Anchor Milk

    “மக்கள போட்டு ஒரு பக்கம் அரசாங்காம் சாக வைக்குது மறுபக்கம் இந்த கம்பனி காரனுகள் சாக வைக்கானுகள்” “ என இம் மாதம் 03 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (03.03.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த பதிவின் கீழ் பதிவிட்டிருந்த கமெண்டுக்களை பார்வையிட்ட போது, அதில் சிலர் இது தவறான தகவல் எனவும் ஒரு சிலர் இது உண்மையான தகவல் எனவும் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்து.

    இது தொடர்பாக நாம் அங்கர் நிறுவனத்தின் இலங்கை விநியோகஸ்தரான Fonterra நிறுவனத்தினை தொடர்புகொண்டு வினவியபோது, இது உற்பத்தி செய்யப்பட்டது 20.01.2023 என்றும் இதன் காலாவதி திகதி 06.03.2023 என்றும் கூறப்பிட்டனர்.

    மேலும், இது பிரதி செய்யப்படும் போது ஏற்பட்டுள்ள சில தவறின் நிமிர்த்தமாக படத்தில் உள்ள ஸ்பூன் மீதுள்ள இலக்கம் 1 ( அதாவது ஜனவரி மாதத்தினை குறிக்கும் ) இலக்கம் 4 ( அதாவது ஏப்ரல் மாதம்) போன்று காட்சியாகின்றது என விளக்கமளித்தனர்.

    குறித்த யோகட் தொடர்பாக அவர்கள் வழங்கிய தகவல்

    MFD Date: 20.01.2023

    EXP Date: 06.03.2023

    Batch no: 10B7B

    இதில் 12 யோகட் கப்கள் அடங்கிய தொகுதி 6 கிடைமட்டத்தில் print செய்யப்படும் போது ஏற்றபட்ட சிறிய தவறினால் குறித்த எழுத்துக்கள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து சற்று கீழ் print ஆகியுள்ளதை காணமுடியும் என எமக்கு மேலும் அறிய தந்தனர். 

    நாம் குறித்த புகைப்படத்தினை நன்கு Zoom செய்து பார்த்தபோது, இதில் இலக்கம் ஒன்று அச்சிடப்பட்டுள்ளது தெரிகின்றது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், Newdale யோகட் தயாரிப்பு திகதி குறித்து தகவல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:Newdale யோகட் தயாரிப்பு திகதி குறித்து பரவும் தகவல் உண்மையா?

    Fact Check By: S G Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-03-31

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.