Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ‘சென்னை அப்பல்லோ மருத்துவமனை அருகே அடித்துச் செல்லப்படும் கார்கள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-12-18
    2 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    ‘’ சென்னை அப்பல்லோ மருத்துவமனை அருகே அடித்துச் செல்லப்படும் கார்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர

    ‘’ சென்னை அப்பல்லோ மருத்துவமனை அருகே அடித்துச் செல்லப்படும் கார்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். 

    தகவலின் விவரம்:

    இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

    இதில், ‘’ மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை அருகே அடித்துச் செல்லப்படும் கார்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

    Claim Link l Archived Link 

    பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.  

    உண்மை அறிவோம்:

    2023ம் ஆண்டு முடிவடையும் நிலையில் மிக்ஜாம் என்ற புயல் சென்னைக்கு மிக அருகில் கடந்து சென்றுள்ளது. இதனால், சென்னை மாநகரம் மட்டுமின்றி புறநகர்ப்பகுதிகள் முழுக்க வெள்ளக்காடாக மாறியுள்ளன. 

    இதையொட்டி சமூக வலைதளங்களில் பல்வேறு பதிவுகள் பகிரப்படுகின்றன. இதில் ஒன்றுதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலும்…

    ஆனால், இந்த கார்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை அருகே எடுக்கப்பட்டதல்ல; இது மேடவாக்கம் மற்றும் பள்ளிக்கரணை நிர்வாக எல்லைக்குட்பட்ட புரவாங்கரா என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த பாதிப்பாகும். 

    மேலும் சில செய்தி ஆதாரங்கள் இதோ…

    Dinamani Link l  ETV Bharat Link  

    எனவே, இது தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை அருகே எடுக்கப்பட்ட வீடியோ அல்ல, என்று உறுதி செய்யப்படுகிறது. 

    முடிவு:

    உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

    Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

    Avatar

    Title:‘சென்னை அப்பல்லோ மருத்துவமனை அருகே அடித்துச் செல்லப்படும் கார்கள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

    Written By: Fact Crescendo Team 

    Result: Missing Context

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    FCT

    Fact Crescendo Team

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-12-18

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.