Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மறுத்தாரா மோடி?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-11-30
    2 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    ‘’ ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மோடி மறுப்பு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதி

    ‘’ ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மோடி மறுப்பு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

    தகவலின் விவரம்:

    இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

    இதில் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை பிடித்தபடி நிற்க, மோடி அவரை கண்டும் காணாமல் பரிசு மேடையில் இருந்து இறங்கிச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு *மோடிக்கும் கத்தார் அதிபருக்கும் இருக்கும் வித்தியாசம்…* என்று தலைப்பிட்டுள்ளனர். 

    Claim Link l Archived Link 

    பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.  

    உண்மை அறிவோம்:

    சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடர் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி, ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இது இந்திய ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதன்காரணமாக, சமூக வலைதளங்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்களை காரசாரமாக விமர்சித்து வருகின்றனர். 

    Fact Crescendo Tamil Link  

    அதேசமயம், பாஜக எதிர்ப்பாளர்கள் வேண்டுமென்றே மோடியை கேலி செய்து, இதுபோன்று தவறான தகவல்களை பரப்புகின்றனர். 

    ஆம், இது ஒரு எடிட் செய்யப்பட்ட வீடியோ ஆகும். உண்மையான வீடியோ உடன் எடிட் செய்யப்பட்ட வீடியோவை ஒப்பீடு செய்து, கீழே இணைத்துள்ளோம். 

    இதுதொடர்பான கூடுதல் செய்தி ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 

    timesnownews l hindustantimes

    மேலும், நமது ஆங்கில பிரிவு ஏற்கனவே விரிவான ஃபேக்ட்செக் வெளியிட்டுள்ளது. 

    எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ எடிட் செய்யப்பட்ட ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. 

    முடிவு:

    உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

    Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram 

    Avatar

    Title:ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மறுத்தாரா மோடி?

    Written By: Fact Crescendo Team 

    Result: ALTERED

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    FCT

    Fact Crescendo Team

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-11-30

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.