Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    WhatsApp கணக்குகளை ஹெக் செய்து இடம்பெறு பண மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருங்கள்!

    කරුණු පැහැදිලි කිරීම
    2025-06-05
    4 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    இன்றைய நவீன யுகம் புதிய கண்டுப்பிடிப்புகளினால் வேகமாக முன்னேறிவருகின்றது. அதேபோன்று மோசடிக்காரர்களும் இந்த தொழிநுட்பங்களை பயன்படுத்தி அவர்களின் மோசடி யுத்திகளையும் வளர்த்துக்கொண்டே செல்கின்றார்கள் என்றே கூற வேண்டும். அந்தவகையில் இவ்வாறான மோசடிக்காரர்கள் ட

    இன்றைய நவீன யுகம் புதிய கண்டுப்பிடிப்புகளினால் வேகமாக முன்னேறிவருகின்றது. அதேபோன்று மோசடிக்காரர்களும் இந்த தொழிநுட்பங்களை பயன்படுத்தி அவர்களின் மோசடி யுத்திகளையும் வளர்த்துக்கொண்டே செல்கின்றார்கள் என்றே கூற வேண்டும்.

    அந்தவகையில் இவ்வாறான மோசடிக்காரர்கள் டிஜிட்டல் தொழிகூட்பங்களை பயன்படுத்தி, உங்களுக்கு தெரிந்தவர்களைப் போல நடித்து உங்களை ஏமாற்றக் கூடும். எனவே அது குறித்த தெளிவை பின்வரும் கட்டுரை ஊடாக உங்களுக்கு பெறக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றோம்.

    சமூக ஊடக தளமான WhatsApp கணக்குகள், மோசடி செய்பவர்களால் ஹேக் செய்யப்பட்டு அதன் ஊடாக  சமூக ஊடகப் பயனர்கள் மோசடி வலையில் சிக்கிய சம்பவங்கள் சமீபகாலமா இலங்கையில் இடம்பெற்று வருகின்றன.

    அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் மற்றும் தொழிலதிபர்களின் சரிபார்க்கப்பட்ட கணக்குகளை சைபர் குற்றவாளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு, அவர்களின் தொடர்புகளிலிருந்து மோசடியாக பணம் வசூலிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

    இவ்வாறான மோசடி முறையில் நேற்று (2025.06.03) பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் WhatsApp இலக்கத்தை ஹெக் செய்து பாராளுமன்ற உறுப்பினரைப் போல நடித்து, அவரின் வங்கிக் கணக்குகளில் சில பிரச்சினைகள் காணப்படுவதாகவும் மறுநாள் காலையில் திருப்பித் தருவதாகவும் தெரிவித்து 100,000 ரூபாவை வைப்பிலிடுமாறு அவரின் தொலைபேசி தொடர்புகளுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த மோசடி செயற்பாடானது இலங்கையில் மாத்திரமன்றி உலகமுழுவதும் சமீபகாலமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    மோசடிக்காரர்களினால்  WhatsApp கணக்கு எவ்வாறு ஹெக் செய்யப்படுகின்றது

    சரிபார்ப்புக் குறியீடு (Verification Code)  திருட்டு என்பது, வேறொருவருக்கு சொந்தமான WhatsApp கணக்கை கையகப்படுத்துவதற்காக  பாதிக்கப்பட்டவரை ஏமாற்றி அவர்களின் 6 இலக்க சரிபார்ப்பு குறியீடு phishing messages மூலம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.

    அதன் பின்னர் மோசடிக்காரரினால் பாதிக்கப்பட்டவரின் WhatsApp கணக்கை கையாள முடியும்.

    மோசடிக்காரர்களிடமிருந்து வரும் செய்திகள்

    அதன் பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் WhatsApp கணக்கிலுள்ள அவர்களின் தொடர்பு இலக்கங்களுக்கு மருத்துவ செலவு உள்ளிட்ட பல காரணங்களை தெரிவித்து அவசரமாக தான் அனுப்பும் வங்கி கணக்கிற்கு பணம் வைப்பு செய்யுமாறு தெரிவித்த செய்திகள் அனுப்பப்படும்.

    மேலும் தனக்கு தெரிந்தவரின் WhatsApp இலக்கத்தில் இருந்து இவ்வாறான குறுஞ்செய்திகள் வருவதினாலேயே மூன்றாம் தரப்பினர் இவ்வாறான மோசடிகளில் சிக்கிக் கொள்கின்றனர்.

    சமீபத்தில் இலங்கையில் இடம்பெற்ற இதுபோன்ற மோசடி சம்பவம் 

    பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின்  WhatsApp இலக்கத்தில் இருந்து அனுப்பப்பட்ட செய்தி (ஜூன் 2025)

    ஊடகத்துறை சார்ந்தவர்களை இலக்கு வைத்து இடம்பெற்ற சம்பவங்கள் (2024 பிற்பகுதி – 2025 முற்பகுதி)

    இலங்கையின் ஊடவியலாளர் மற்றும்  கல்வியாளரான அமந்த பெரேரா, ஊடகவியலாளர்களுக்கு சொந்தமான குறைந்தது ஆறு WhatsApp கணக்குகள் இந்த முறையில் ஹெக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

    பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்காக, போலி Zoom கூட்ட அழைப்பிதழ்களை அனுப்புவது போன்ற தந்திரோபாயங்களை மோசடிக்காரர்கள் பயன்படுத்தியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். 2025 ஏப்ரல் மாதத்தில், ஒரு ஊடக நிபுணர் குறிவைக்கப்பட்டு, அவரது வட்ஸ்அப் எண் மூலம், மோசடி செய்பவர்கள் கணக்கில் உள்ள வட்ஸ்அப் இலக்கங்களுக்கு செய்திகளை அனுப்பி, இது ஒரு மருத்துவ அவசரநிலை என்று கூறி 50,000 ரூபாவை  கோரியுள்ளனர்.

    இலங்கை CERT|CC அறிக்கையிடல்கள்  (2024 ஒக்டோபர்)

    2025 மார்ச் மாதத்தில்  ஒரு அரச அதிகாரியின் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகப் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் ஒருவரின் WhatsApp  ஹெக் செய்யப்பட்டு, கீழ்நிலை ஊழியர்களிடமிருந்து தனிநபர் கடன்களைப் பெற பயன்படுத்தப்பட்டதாக இலங்கை CERT நிறுவனத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாட்டில் WhatsApp  தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருவதைத் தடுக்க, , ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்கள் (OTP) தொடர்பில் WhatsApp  பயனர்களுக்கு இலங்கை கணினி அவசர தயார் நிலைப் பிரிவு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. Link | Link

    இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் WhatsApp கணக்குகளை ஹெக் செய்தல் மற்றும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவது குறித்து சென்னை பொலிஸ் சைபர் முறைப்பாட்டு பிரிவு கவலை தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

    மருத்துவ அல்லது தனிப்பட்ட அவசரநிலைகள் என்ற போலிக் காரணத்தின் கீழ் மோசடி செய்பவர்கள் WhatsApp கணக்குகளை ஹெக் செய்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து குறிப்பட்டளவு பணத்தை மோசடி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

    இவ்வாறான மோசடிகளிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது?

    WhatsApp இல் இருமுறை சரிபார்ப்பை (Two-Step Verification)  இயக்கி வைத்துக்கொள்ளுதல்.

    • Settings > Account > Two-step verification > Enable

    உங்கள் கணக்கைப் பாதுகாக்க 6 இலக்க PIN ஐ உட்செலுத்தவும்

    உங்கள்  PIN இலக்கத்தை யாருடனும் ஒருபோதும் பகிர வேண்டாம். எந்தவொரு சட்டப்பூர்வ அமைப்பும் அல்லது நபரும் உங்கள் WhatsApp  PIN இலக்கத்தை ஒருபோது கேட்கமாட்டார்கள்.

    மேலும் அவ்வாறான அவசர பண வைப்புகள் தொடர்பில் உங்களுக்கு வரும் செய்திகள் குறித்து பணம் அனுப்புவதற்கு முன்னர் நன்கு ஆராயவும். அத்துடன் உங்களுக்கு இவ்வாறான செய்திகள் வந்த இலக்கதிற்கு வீடியோ அல்லது சாதாரண அழைப்பை ஏற்படுத்தி பரிசோதித்து பார்த்து அதன் உண்மைத் தன்மை தொடர்பில் அறிந்துக்கொள்ளலாம்.

    உங்கள் WhatsApp ஐ வேறு யாராவது ஹெக் செய்ததாக நீங்கள் சந்தேகித்தால், உங்கள் அனைத்து Loging களில் இருந்தும் உடனடியாக வெளியேறவும்.

    • Settings > Linked Devices > Log out from unknown devices

    மேலும் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் உங்கங் குடும்பத்தினர் மற்றும் தொழிநுட்பம் தொடர்பில் போதிய தெளிவின்றி இருக்கும் உங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். ஏனெனில் இவ்வாறானவரடகளை குறிவைத்தே இவ்வாறான மோசடிகள் பெரும்பாலும் இடம்பெறுகின்றன.

    நீங்கள் இவ்வாறான மோசடிக்கு ஆளாகினால் என்ன செய்ய வேண்டும்?

    உடனடியாக இது குறித்து உங்கள் தொடர்பு இலக்கங்களுக்கு தெரிவித்து, உங்கள் இலக்கத்திலிருந்து வரும் எந்த செய்திகளையும் நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கவும்.

    WhatsApp இற்கு முறைப்பாடு செய்யவும்: [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது WhatsApp செயலியின் உதவிப் பகுதியைப் பயன்படுத்தவும்.

    இலங்கை CERT|CC நிறுவனத்திற்கு அறிவிக்கவும்:

    மின்னஞ்சல்: [email protected]

    அழைக்கவும்: +94 11 2691683

    பணம் காணாமற்போயிருக்கும் பட்சத்தில் பொலிஸில் முறைப்பாடு செய்யவும்

    இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் நிகழும் மோசடிகள் மற்றும் அவற்றிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பில் எமது Factcrescendo குழு மற்றும் இலங்கை CERT இணைந்து நடத்திய விழிப்புணர்வு திட்டத்தின் காணொளிகள் பின்வருமாறு

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Avatar

    Title:WhatsApp கணக்குகளை ஹெக் செய்து இடம்பெறு பண மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருங்கள்!

    Fact Check By: suji shabeedharan 

    Result: Insight

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-06-05

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.