Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    முகலாயப் பேரரசர் ஷாஜகான் மனைவி மும்தாஜின் புகைப்படம் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-03-26
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :முகலாயப் பேரரசர் ஷாஜகான் மனைவி மும்தாஜின் புகைப்படம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்

    INTRO :
    முகலாயப் பேரரசர் ஷாஜகான் மனைவி மும்தாஜின் புகைப்படம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் மும்தாஜ் புகைப்படம் வெளியானது 😱😱😱 #history “ என இம் மாதம் 21 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (21.03.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த இரு புகைப்படங்களையும் தனித்தனியாக கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, முதல் படத்தில் இருப்பவர் சுல்தான் ஷாஜகான் பேகம் என கண்டறியப்பட்டது.

    alamy.com

    மேலும் வீடியோவை அவதானித்தபோது, அதில் காணப்பட்ட வீதிகளின் பெயர் பலகையின் மூலம் இது இந்தியாவில் எடுக்கப்பட்டமை கண்டறியப்பட்டது.

    நாம் தொடர்ந்து மேற்கொண்ட தேடலில் புகைப்படத்தில் இருப்பது பேகம் ஆஃப் போபால் என்று குறிப்பிட்டுப் பல செய்திகள் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. சுல்தான் ஷா ஜஹான் என்பது அவரது பெயர் என அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவரைப் பற்றிப் படித்துப் பார்க்கும் போது, தன்னுடைய ஆட்சிக்காலத்தில் கல்விக்கு, குறிப்பாக பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் என்று தெரிந்தது. பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

    indianexpress.com I Archive

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், முகலாயப் பேரரசர் ஷாஜகான் மனைவி மும்தாஜின் புகைப்படம் என பரவி வருகின்ற படத்தில் உள்ளவர் போபாலை ஆட்சி செய்த பேகம் ஷாஜஹான் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக எமது தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:முகலாயப் பேரரசர் ஷாஜகான் மனைவி மும்தாஜின் புகைப்படம் உண்மையா?

    Fact Check By: S.G.Prabu  

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-03-26

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.