Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    தளபதி விஜய் நாமல் ராஜபக்சவை சந்தித்தாரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-01-30
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :தளபதி விஜய் நாமல் ராஜபக்சவை சந்தித்தாக, ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம

    INTRO :
    தளபதி விஜய் நாமல் ராஜபக்சவை சந்தித்தாக, ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    tiktok Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” தளபதி விஜய் விபச்சார

    விடுதி நடத்துனர்

    நாமல் ராஜபக்சவை

    சந்தித்துள்ளார்

    #தளபதி_உயிர் #தளபதி_ரசிகை #தளபதிரசிகன் #தளபதிவிஜய்அண்ணா_வெறியன் #தளபதிவிஜய்அண்ணா_வெறியன் #நாமல்ராசபக்சே #ராஜபக்சக்கள் “ என இம் மாதம் 07 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (07.01.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, நடிகர் விஜய் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை எடிட் செய்துள்ளமை, எம்மால் காணக்கிடைத்தது.

    timesofindia

    மேலும் இணையத்தில் பகிரப்படும் புகைப்படத்தினை நாம் நன்கு ஆய்வு செய்த போது, குறித்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளதாக, தெளிவாக தெரிவதும் குறிப்பிடத்தக்கது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், தளபதி விஜய் நாமல் ராஜபக்சவை சந்தித்ததாக, பகிரப்படும் புகைப்படம் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:தளபதி விஜய் நாமல் ராஜபக்சவை சந்தித்தாரா?

    Written By: S.G.Prabu 

    Result: Altered

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-01-30

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.