Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ஹமாஸின் வெற்றியைக் கொண்டாடும் பலஸ்தீன் கிறிஸ்தவர்கள் என பரவும் புகைப்படங்கள் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-10-29
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :ஹமாஸின் வெற்றியைக் கொண்டாடும் பலஸ்தீன் கிறிஸ்தவர்கள் என ஒரு புகைப்படத்தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என

    INTRO :

    ஹமாஸின் வெற்றியைக் கொண்டாடும் பலஸ்தீன் கிறிஸ்தவர்கள் என ஒரு புகைப்படத்தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link 

    சமூகவலைத்தளங்களில் “🔴ஹமாஸின் வெற்றியைக் 

    கொண்டாடும் பலஸ்தீன் 

    கிறிஸ்தவர்கள்..! 🙌❤ “ என இம் மாதம் 09 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (09.10.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    மேலும் உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, 

    நாம் பகிரப்படும் புகைப்படங்களை தனித்தனியாக ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

    குறித்த தேடலின் போது, அதில் இருந்து புகைப்படங்கள் பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வெவ்வேறு சம்பவங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

    அருட்தந்தை  Abdullah Yulio பலஸ்தீன கொடியினை ஏந்தியுள்ளவாறு 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படமாகும்

    gettyimages Link | Archived Link

    2014 ஆம் ஆண்டு பாப்பரசர் பிரான்சிஸ் பெத்லகேமில் நடத்திய திருப்பலியின் போது, அருட் சகோதரி பாலஸ்தீன கொடியினை ஏந்தியுள்ள புகைப்படமாகும்.

    alamy Link | Archived Link

    2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற ஞாயிறு திருப்பலியின் போது இஸ்ரேயலின் இராணுவத்தினால் பாலஸ்தீன கத்தோலிக்கர்கள் தாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.

    christiantoday Link | Archived Link  | imemc link | Archived Link  

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி ஹமாஸின் வெற்றியைக் கொண்டாடும் பலஸ்தீன் கிறிஸ்தவர்கள் என பகிரப்படும் புகைப்படங்கள் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ஹமாஸின் வெற்றியைக் கொண்டாடும் பலஸ்தீன் கிறிஸ்தவர்கள் என பரவும் புகைப்படங்கள் உண்மையா?

    Written By: S G Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-10-29

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.