Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    சிறிதரன் தொடர்பாக பரவும் தகவல்கள் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-09-16
    6 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரன் தொடர்பாக சில வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என

    இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரன் தொடர்பாக சில வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    Facebook Link
    | Archived Link


    Facebook Link
    | Archived Link

    Facebook Link | Archived Link


    சமூக வலைத்தளங்களில் “சிறிதரன் தொடர்பாக அவரின் பெயரிற்கு இழுக்கு விளைவிக்கும் சில கருத்துக்களை முன்வைத்து” இம் மாதம் 10 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (10.09.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்துள்ளதோடு மேலும் குறித்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஆதாரமற்றவை என அதற்கு கமெண்ட் செய்து பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    UPDATE Claim –

    Facebook Link | Archived Link

    சமூக வலைத்தளங்களில் “தமிழ் மக்களின் வாக்குகளால் தனது குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் சிறிதரன்” இம் மாதம் 09 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (09.11.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    Facebook Link | Archived Link

    சமூக வலைத்தளங்களில் “இந்த நயவஞ்சக சிறிதரனுக்கா வாக்களிக்க போகிறீர்கள்..

    இதனை பார்த்துவிட்டு சற்று சிந்தியுங்கள்..” இம் மாதம் 08 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (08.11.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் பல போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைக்கின்றது.

    அதற்கமைய இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் தொடர்பாக சில ஆதாரமற்ற வீடியோக்களை வெளியிட்டுள்ளமை காணக்கிடைத்தது.

    இது குறித்தான தகவலின் உண்மைத்தன்மையை கண்டறிய எமது குழுவினர் சிறிதரனின் மகனை தொடர்புகொண்டு வினவியபோது, இது முற்றிலும் போலியான தகவல் எனவும், இது திட்டமிட்டு தமது தந்தையின் பெயருக்கு அபகீர்த்தி விளைவிக்கும் வண்ணம் இடம்பெறும் அரசியல் பழிவாங்கல் என எமக்கு தெரிவித்தார்.

    நாம் சிறிதரன் தொடர்பாக பரவும் குறித்த பேஸ்புக் பக்கங்களை நாம் ஆய்வு செய்தபோது, அதில் கொடுக்கப்பட்டிருந்த தகவல்கள் போலியானவை என கண்டறியப்பட்டது.

    குறித்த பக்கங்களில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களை நாம் ஆய்வுக்கு உட்படுத்திய போது, ஒரு பக்கத்தில் வழங்கப்பட்ட இலக்கமானது, ஒன்று கிறிஸ்தவ ஆலயத்தினுடையது இன்னொரு இலக்கமானது யாழ்ப்பாணத்தில் உள்ள Green Grass Hotel இலக்கம் என கண்டறியப்பட்டது.

    மேலும், குறித்த பக்கங்களில் வழங்கப்பட்ட முகவரிகளும் போலியாக வழங்கப்பட்டிருந்தமை எமது ஆய்வில் கண்டறியப்பட்டது.

    நாம் மேலும் குறித்த பக்கங்கள் உருவாக்கப்பட்ட தினத்தினை ஆய்வு செய்தபோது, குறித்த பக்கங்கள் அனைத்தும் கடந்த செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

    இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் குறித்து பரவும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக உத்தியோகப்பூர்வ செய்தி நிறுவனங்களில் இதற்கு முன்னர் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதா என எமது குழு மேற்கொண்ட ஆய்வின் போது அவ்வாறான எவ்விதமான ஆதாரங்களும் எமக்கு கிடைக்கவில்லை.

    Update

    நாம் குறித்த பேஸ்புக் பக்கத்திற்கு உபயோகிக்கப்பட்டுள்ள News.lk என்ற பெயர் இலங்கை அரசின் உத்தியோகபூர்வ தகவல் ஊடகத்தின் பெயர் மற்றும் அதன் இலச்சினையும் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு அதை போன்றே வடிவமைத்துள்ளமை காணக்கிடைத்தது

    ஆகவே நாம் குறித்த பேஸ்புக் பக்கத்தின் உருவாக்க தினத்தினை ஆய்வு செய்தபோது இது கடந்த மாதம் 24 ஆம் திகதி (24.10.2024) உருவாக்கப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது.

    நாம் குறித்த பேஸ்புக் பக்கத்தில் தொடர்புகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள இணையத்தளம் மற்றும் மின்னஞ்சல் முகவரி தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டபோது குறித்த இரு இணையத்தளங்களும் உபயோகத்தில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

    இது தொடர்பாக நாம் சிறிதரனை தொடர்புக்கொண்டு வினவியபோது, தேர்தல் நேரத்தில் தனது பெயரிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதமாக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மேற்கொண்ட போலி பிரச்சார நடவடிக்கையை போன்று தற்போது மேற்கொண்டு வருவதாக எமக்கு தெரிவித்தார்.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சிறிதரன் தொடர்பாக பரவும் தகவல்கள் ஆதாரமின்றி போலியாக உருவாக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளமை என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    GP

    Gnana Prabhu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-09-16

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.