Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ரஷ்ய ஜனாதிபதி புடின் நெதன்யாகுவை அவமதித்ததாக பரவும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-03-02
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :ரஷ்ய ஜனாதிபதி புடின் நெதன்யாகுவை அவமதித்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவன

    INTRO :
    ரஷ்ய ஜனாதிபதி புடின் நெதன்யாகுவை அவமதித்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ரஷ்ய அதிபர் புடின் நெதன்யாகுவை கன்னத்தில் அடித்த மாதிரி செய்த காரியம். 😂😂😂.

    பக்கத்தில் அமர்ந்து இருந்திருக்கும் நெத்ன்யாஹு கண்டு கொடுக்காமல் ஃபிரண்ட்ஸ் அதிபர் மெக்ரானுக்கு கை கொடுத்த சம்பவம் அந்த அரங்கத்தையே அதிர வைத்துள்ளது.. “ என இம் மாதம் 05 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (05.02.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது. 

    Fact Check (உண்மை அறிவோம்) 

    நாம் முதலில் குறித்த வீடியோ தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் போது, இது கடந்த 2020 ஆம் ஆண்டு ஐந்தாவது முறையாக நடந்த உலகப் ஹோலோகாஸ்ட்(இனப்படுகொலை) மன்றத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புடின் வருகை தந்தபோது எடுக்கப்பட்ட காட்சி என யூடியுப் தளத்தில் பதிவிட்டிருந்த பதிவு எமக்கு கிடைக்கப்பெற்றது.

    மேலும் மேற்கொண்ட ஆய்வின் போது, குறித்த நிகழ்வு தொடங்குவதற்கு முன்னர் ரஷ்ய ஜனாதிபதி இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நெதன்யாகுவையும் அவரின் மனைவியையும் சந்தித்திருந்தமை தொடர்பாக வெளியாகியிருந்த செய்தி கிடைக்கப்பெற்றது. 

    அத்துடன் குறித்த நிகழ்வில் புடின் உரை ஒன்றும் நிகழ்த்தியதோடு இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நெதன்யாகுவையும் கட்டி தழுவிய சம்பவமும் இடம்பெற்றிருந்தமை காணக்கிடைத்தது.

    குறித்த பழைய வீடியோவை இணையத்தில் தவறான கருத்துடன் புதிது போன்று தற்போது பரப்பி வருகின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் நெதன்யாகுவை அவமதித்ததாக என பரவும் வீடியோவில் எவ்விதமான உண்மைத் தன்மையும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ரஷ்ய ஜனாதிபதி புடின் நெதன்யாகுவை அவமதித்ததாக பரவும் வீடியோ உண்மையா?

    Written By: S G Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-03-02

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.