Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    வயலில் அறுவடை செய்யும் ரோபோ என பரவும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-02-12
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :வயலில் அறுவடையில் ஈடுப்படும் ரோபோ என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டற

    INTRO :
    வயலில் அறுவடையில் ஈடுப்படும் ரோபோ என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” 

    இந்த போகம் வெள்ளாம வெட்டுறதுக்கு படுவாங்கரை பக்கம் கொண்டு இறக்கத்தான் இருக்கு….. “ என கடந்த மாதம் 25 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (25.01.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது. 

    Fact Check (உண்மை அறிவோம்) 

    நாம் முதலில் குறித்த வீடியோவை நன்கு அவதானித்த போது, அதில் சில பகுதிகளில் குறித்த ரோபோவின் கால்கள் தரை மீது படாமலும், ரோபோவின் உடலினை சுற்றி மேற்பரப்பு தெளிவின்றி மங்கலாக இருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

    ஆகவே குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

    குறித்த தேடலின் போது, @TheFigen  என்பவர்  x பக்கம் (டுவிட்டர்), கடந்த ஜனவரி மாதம் பதவிட்ட பதிவு பின்னர் இதன் உண்மை தன்மையினை கண்டறிந்த பின்னர் அதனை நீக்கியுள்ளமையும் காணக்கிடைத்தது.

    twitter.com

    குறித்த பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக வெளியான செய்தி அறிக்கை இங்கே இணைக்கப்பட்டுள்ளது. link 

    மேலும் நாம் இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது,  Wonder Studio என்ற மென்பொருளின் உதவியுடன் இவ்வாறான வீடியோக்களை தயாரிக்க முடியும் என கடந்த வருடம் டிசம்பர் மாதம் AI Video School என்ற யூடியுப் பக்கத்தில் எவ்வாறு வீடியோக்களை தயார் செய்வது தொடர்பான பயிற்சி வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை காண்கிடைத்தது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், வயலில் அறுவடை செய்யும் ரோபோ என பகிரப்படும் வீடியோவும் சில மென்பொருள்களை பயன்படுத்தி உருவாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:வயலில் அறுவடை செய்யும் ரோபோ என பரவும் வீடியோ உண்மையா?

    Written By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-02-12

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.