Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    துபாயில் இன்று புயல் என பரவும் வீடியோ ; உண்மை தெரியுமா ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-04-19
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :துபாயில் இன்று புயல் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. த

    INTRO :
    துபாயில் இன்று புயல் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ துபாய் மழை வெள்ளத்தால் மூழ்கியநிலை….. “ என இம் மாதம் 18 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (18.04.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த காணொளியில் நன்கு அவதானித்த போது பல வீடியோக்களை ஒன்றாக்கி, குறித்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது. ஆகவே வீடியோவில் உள்ள காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

    வீடியோ 01

    இந்த தேடலின் போது disaster788 என்ற டிக்டொக் கணக்கில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி குறித்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. 

    வீடியோ 02

    குறித்த வீடியோவின் முழுமையான வீடியோ எமக்கு கிடைக்கப்பெற்றது. கடந்த 2019 ஆம் வருடம் ஜுலை மாதம் 17 ஆம் திகதி “Giant Monster Attacks City” என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    வீடியோ 03 

    இந்த வீடியோவை நாம் தேடியபோது, இது கடந்த வருடம் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி துபாயில் நடந்ததாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவு எமக்கு கிடைக்கப்பெற்றது.

    வீடியோ 04

    இதனை நாம் ஆய்வு செய்த போது, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முதல் யூடியுப் தளத்தில் “Cuba Hurricane Tornado” என்ற தலைப்பில் 

    Surrealvideos எனும் யூடியுப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. 

    அதற்கமைய இது சமீபத்தில் துபாயில் இடம்பெற்றதாக பரவும் சம்பவத்துடன் தொடர்புடைய வாய்ப்பில்லை என கண்டறியப்பட்டது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், துபாயில் இன்று புயல் என பரவும் வீடியோ பல்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற சம்பவங்களின் போது பதியப்பட்ட வீடியோக்களை ஒன்றாக தொகுத்து தற்போது நிகழ்ந்த சம்பவம் என பரப்பி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:துபாயில் இன்று புயல் என பரவும் வீடியோ ; உண்மை தெரியுமா ?

    Fact Check By: S.G.Prabu 

    Result: Missing Context

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-04-19

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.