Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    திராவிட_மாடல் சாலை என்று பகிரப்படும் தெலுங்கானா வீடியோவால் சர்ச்சை…

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-11-30
    2 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    ‘’திராவிட_மாடல் சாலை’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ 💥ஓட்டு போட்ட மக்களுக்கு  திமு

    ‘’திராவிட_மாடல் சாலை’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.

    தகவலின் விவரம்:

    இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.

    இதில், ‘’ 💥ஓட்டு போட்ட மக்களுக்கு

     திமுக ஆட்சியின் பரிசு.💥…      

    காசுக்கு வாக்கை விற்றால்

    இந்த நிலைதான் மக்களே. 😢

    ஸ்டாலின் தான் வராரு…😂😂😂

    #பொம்மை_முதல்வர்

     #திராவிட_மாடல் .’’ என்று எழுதப்பட்டுள்ளது. 

    Facebook Claim Link l Archived Link

    பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். 

    உண்மை அறிவோம்:

    மேற்கண்ட வீடியோ பற்றி நாம் தகவல் தேடியபோது, இது ஏற்கனவே கடந்த செப்டம்பர் 2023 மாதம் தெலுங்கு மொழியில் பகிரப்பட்டிருப்பதைக் கண்டோம்.

    இதுதொடர்பான ஃபேஸ்புக் பதிவு ஒன்றையும் கீழே இணைத்துள்ளோம்.

    மேலும், செய்தி ஆதாரம் இதோ…

    இதன்படி, தெலுங்கானா மாநிலம், zaheerabad என்ற பகுதியில் உள்ள algol bypass road-ல் ஏற்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கி, இவ்வாறு வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டு, மேற்கண்ட வீடியோவை தெலுங்கானா மக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

    அதனை எடுத்து, திமுக அரசு இவ்வாறு சாலை போட்டு மக்களை ஏமாற்றுவதாகக் குறிப்பிட்டு வதந்தி பரப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

    முடிவு:

    உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
    Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

    Avatar

    Title:திராவிட_மாடல் சாலை என்று பகிரப்படும் தெலுங்கானா வீடியோவால் சர்ச்சை…

    Written By: Fact Crescendo Team 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    FCT

    Fact Crescendo Team

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-11-30

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.