Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    வத்தேகமயில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழந்ததாக பகிரப்படும் தகவல் போலியானது!!!

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-08-19
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO : கடந்த சில நாட்களாக இலங்கையின் வத்தேகம பகுதியில் உள்ள தனிமையான வீதியொன்றில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது சிறுமியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. அந்தப் புகைப்படங்களைப் பயன்படு

    Subscribe to our WhatsApp Channel

    INTRO :

    கடந்த சில நாட்களாக இலங்கையின் வத்தேகம பகுதியில் உள்ள தனிமையான வீதியொன்றில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது சிறுமியின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. அந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்தி, அந்தச் சிறுமி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்து பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகினறது. 

    எனவே இந்த தகவலின் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link

    இந்த பிள்ள செத்து போய்ட்டு என்னடா இந்த பிள்ள பாவம் செய்தது cee என தெரிவித்து இந்த பதிவு நேற்று (2026.08.18) பகிரப்பட்டிருந்தது.

    மேலும் அதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    சம்பவத்தின் பின்னணி

    இலங்கையின் கண்டி மாவட்டத்திற்குட்பட்ட வத்தேகம பகுதியில் உள்ள தனிமையான வீதியொன்றில் கைவிடப்பட்ட நிலையில் 4 வயது சிறுமியொருவர் பிரதேசவாசிகள் மற்றும் அதிகாரிகளால் மீட்கப்பட்டார். அவர் மீட்கப்பட்ட போது, அவர் கடுமையான உடல் ரீதியான துன்புறுத்தலுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகியிருந்தார். அவரது முகம் முழுவதும், குறிப்பாக இடது கண்ணைச் சுற்றியுள்ள பகுதியில், கடுமையான காயங்கள் ஏற்பட்டு, அந்தப் பகுதி வீங்கி நீல நிறமாக மாறியிருந்தது. சிறுமி கண்டுபிடிக்கப்பட்டவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், அவரை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

    Facebook 

    நான்கு வயது சிறுமியை முச்சக்கர வண்டியில் அழைத்து வந்து வத்தேகம பகுதியில் வீதியில் கைவிட்டுச் சென்றதாக சந்தேகிக்கப்படும் அந்தச் சிறுமியின் தாயும், சிறுமியின் தாயின் கள்ளக்காதலனுமான சந்தேகநபரும் ஹாலிஎல பொலிஸினால் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர், அவர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

    சிறுமி உயிரிழந்ததாக பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகவில்லை

    பிரதான ஊடகங்களும் இந்தச் சம்பவத்தை செய்தியாக வெளியிட்டுள்ள நிலையில், இந்தச் சிறுமி உயிரிழந்திருந்தால் அது தொடர்பான செய்தியையும் வெளியாகியிருக்க வேண்டும். எனினும், அந்தச் சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கும் எந்தவொரு செய்தியும் பிரதான ஊடகங்களில் வெளியாகவில்லை.

    வத்தேகம பொலிஸ் நிலையம்

    வத்தேகம பொலிஸ் நிலையத்திடமும் இது தொடர்பாக நாம் வினவினோம். இதன்போது, சிறுமி உயிரிழந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவுகள் பொய்யானவை என அவர்கள் உறுதிப்படுத்தினர். மேலும், அந்தச் சிறுமி தற்போது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    கண்டி தேசிய வைத்தியசாலை

    கண்டி தேசிய வைத்தியசாலையும் சிறுமி தற்போது அங்கு தங்கி சிகிச்சை பெற்று வருவதை எம்மிடம் உறுதிப்படுத்தியது. சிறுமி ஆபத்தான நிலையில் இல்லாவிட்டாலும், மேலும் சில நாட்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இருப்பதாகவும், சிறுமி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….


    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் வத்தேகம பகுதியில் உள்ள தனிமையான வீதியொன்றில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 4 வயது சிறுமி உயிரிழந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் பதிவுகள் தவறானவை என்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், சிறுமி தற்போது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்றும், சிறுமி உயிரிழந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்றும் வத்தேகம பொலிஸ் நிலையமும் உறுதிப்படுத்தியுள்ளது

    Result Stamp

    Title: வத்தேகமயில் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழந்ததாக பகிரப்படும் தகவல் போலியானது!!!

    Written By: Suji Shabeedharan

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-08-19

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.