
INTRO :
நடிகை பூர்விகாவை பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கு அழைக்க கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “BIGG BOSS 7 இல் அக்காவை அழைக்க கோரி மையம் சார்பாக அக்காவின் விழுதுகள் ஆர்ப்பட்டம் 😇
#C2C “ என கடந்த மாதம் 25 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு (25.09.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவில் இருந்த கமெண்டுகளை பார்த்த போது இது உண்மையான சம்பவம் என நினைத்து பலர் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

மேலும் உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது,
நாம் முதலில் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருவண்ணாமலை மாவட்டக்குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கப்பற்படை எழுச்சி தினத்தில் மேற்கொண்ட ஆரப்பாட்டம் என கண்டறியப்பட்டது.

dailythanthi.com | Archived Link
இணையத்தில் வைரலாகும் குறித்த புகைப்படத்தினை நாம் ஒப்பிட்டு பார்த்த போது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட புகைப்படத்தினை பயன்படுத்தி எடிட் செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி நடிகை பூர்விகாவை பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கு அழைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் என பகிரப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:நடிகை பூர்விகாவை பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கு அழைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பா ?
Written By: S.G.PrabuResult: Altered



