Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    நேபாள வெள்ளத்தில் புத்தர் சிலை பாதிப்பின்றி இருப்பதாக பகிரப்படும் காணொளி பழைய காணொளியாகும்!

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-08-28
    7 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO  நேபாளம்–திபெத் எல்லைக்கு அருகில் உள்ள போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 460க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2026 ஆகஸ்ட் 26ஆம் திகதி காலை ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப்பெருக்குக்கு, பனிமலைப்

    Subscribe to our WhatsApp Channel

    INTRO 

    நேபாளம்–திபெத் எல்லைக்கு அருகில் உள்ள போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 460க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    2026 ஆகஸ்ட் 26ஆம் திகதி காலை ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப்பெருக்குக்கு, பனிமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் மண்சரிவு காரணமாக ஆற்றின் கிளை ஆறு ஒன்று தடைப்பட்டு, பின்னர் பெருமளவிலான நீர் ஒரே நேரத்தில் கீழ்நோக்கிப் பாய்ந்ததே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அனர்த்த நிலைமையின் போது, புத்தர் சிலையொன்று எவ்வித சேதமுமின்றி இருப்பதைக் காண்பிப்பதாகக் கூறி  புகைப்படம் மற்றும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தது.

    எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link

    இமயமலை மாற்றங்கள்… நேபாள வெள்ளம் சொல்லும் எச்சரிக்கை!

    இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலப்பரப்பையும் பிரிக்கும் உலகின் மிக உயரமான மலைத்தொடர்களில் ஒன்றான இமயமலை, இயற்கை மற்றும் புவியியல் ரீதியாக மட்டுமல்லாமல், இந்து புராணங்களிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

    இந்தியா, நேபாளம், சீனா உள்ளிட்ட நாடுகளில் பரந்து விரிந்துள்ள இமயமலைப் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக வெப்பநிலை அதிகரிப்பு, பனிப்பாறைகள் உருகுதல் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

    பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகள் உருகுவதால் உருவாகும் நீர், சில பகுதிகளில் இயற்கையான தடைகளுக்குப் பின்னால் தேங்கி பனிப்பாறை ஏரிகளை (Glacial Lakes) உருவாக்கக்கூடும். இத்தகைய ஏரிகளின் இயற்கைத் தடைகள் உடையும் பட்சத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

    நேபாளத்தின் வடக்குப் பகுதியில், திபெத் எல்லைக்கு அருகிலுள்ள ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பனிப்பாறை/மண் சரிவுகள், அப்பகுதியில் ஏற்பட்ட பேரழிவின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    🌊 பாறைகள், சகதி மற்றும் குப்பைகளுடன் வேகமாகப் பாய்ந்த வெள்ளம், குடியிருப்புகள், பாலங்கள் மற்றும் ஆற்றங்கரையோர கட்டமைப்புகளை கடுமையாக சேதப்படுத்திய காட்சிகள் நெஞ்சை பதறச் செய்கின்றன.

    நேபாளத்தில் ஏற்பட்ட இந்த பேரிடர், இமயமலைப் பகுதிகளின் இயற்கை மாற்றங்களையும், அவற்றின் தாக்கம் கீழ்நிலைப் பகுதிகளுக்கு எவ்வாறு பரவக்கூடும் என்பதையும் மீண்டும் நினைவூட்டுகிறது.

    🔭 எதிர்காலத்திற்கான பாடம்…

    இத்தகைய திடீர் இயற்கைப் பேரிடர்களுக்குப் பின்னால் உள்ள புவியியல் காரணிகள், பருவநிலை மாற்றங்கள், பனிப்பாறை ஏரிகளின் நிலை மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் அபாயங்களை விஞ்ஞான ரீதியாக தொடர்ந்து கண்காணிப்பதும், முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துவதும் மிக முக்கியம்.

    இயற்கையை வெல்ல முயல்வதைவிட, இயற்கையின் போக்கை புரிந்துகொண்டு அதற்கேற்ப வளர்ச்சியை அமைத்துக்கொள்வதே மனித குலத்தின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பான பாதையாகும்.

    இது விஞ்ஞானத்துக்கும் மெய்ஞ்ஞானத்துக்குமான போட்டி அல்ல…

    இயற்கையைப் புரிந்துகொள்ள மனித அறிவு மேற்கொள்ளும் ஒரு பயணம். 

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என தெரிவிக்கப்பட்டு இந்த பதிவு 2026.08.27 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.

    மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

    Facebook  

    Facebook 

    Fact Check (உண்மை அறிவோம்)

    புகைப்படத்தில் காணப்படுவது நேபாளத்தின் சிட்வான் (Chitwan), நாராயண்காட் (Narayanghat) பகுதியில், நாராயணி ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள கௌதம புத்தர் சிலை ஆகும்.

    சமூக ஊடகங்கள் ஊடாகப் பகிரப்பட்டுள்ள மேற்கண்ட காணொளி, நேபாளத்தில் அண்மையில் பதிவாகிய வெள்ள அனர்த்தத்தால் நாராயணி ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள இந்த புத்தர் சிலை பாதிக்கப்பட்டதாகக் கூறி பகிரப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது. மேலும், சில பிரதான ஊடக நிறுவனங்களும் இதனை அவ்வாறே செய்தியாக வெளியிட்டு, பின்னர் அந்த செய்திகளை நீக்கியுள்ளதையும் காண முடிந்தது.

    இதன் காரணமாக, மேற்கண்ட காணொளியில் இடம்பெற்றுள்ள காட்சிகளை Reverse Image Search மூலம் ஆய்வு செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். இதன்போது, மேற்கண்ட காணொளி 2024ஆம் ஆண்டிலும் ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

    2024 ஜூலை மாதத்தில் நேபாளத்தைப் பாதித்த வெள்ள நிலைமையைக் காட்டும் காணொளி 

    Youtube 

    சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளியையும், 2024ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட காணொளியையும் ஒப்பிடுகையில், நிறங்கள், கேமரா கோணம் மற்றும் புத்தர் சிலைக்கு அருகில் நீர் பாயும் விதம் ஆகியவை ஒரே மாதிரியாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.

    2024 ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் நேபாளத்தில் தொடர்ச்சியான பருவமழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு நிலை ஏற்பட்டிருந்தது. சிட்வான் மாவட்டத்தின் சிமால்டால் பகுதியில், கடும் மழை மற்றும் மண்சரிவு காரணமாக 65 பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகளும் அடித்துச் செல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அந்தக் கடுமையான வெள்ள நிலைமை தொடர்பான ஊடக அறிக்கைகளை இங்கும் மற்றும் இங்கும் பார்க்கலாம்.

    2024ஆம் ஆண்டு நேபாளத்தைப் பாதித்த இந்த வெள்ள நிலைமையின்போது, குறித்த புத்தர் சிலைக்கு அருகில் நீர் பாய்ந்து சென்ற விதத்தைக் காட்டும் மேலும் பல காணொளிகளும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பதிவாகியிருந்தன.

    Facebook 

    சிட்வானில் உள்ள நாராயண்கட் பகுதியில் நாராயணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் புத்தர் சிலையைச் சுற்றி மோதியவாறு பாய்ந்து சென்றதைப் போன்ற காட்சிகளைக் கொண்ட புகைப்படங்கள் 2024 ஜூலை 07ஆம் திகதி ஊடகங்களில் வெளியாகியிருந்தன. 

    Facebook 

    நேபாளத்தின் நாராயண்காரில் உள்ள ஊடகவியலாளர் ரமேஷ் குமார்

    இந்த புத்தர் சிலை காணப்படும் நாராயண்கார் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ரமேஷ் குமார் போடெலை எம்மால் தொடர்புகொள்ள முடிந்தது. அவர் உறுதிப்படுத்தியதாவது, இது பழைய காணொளி என்பதுடன், இந்தக் காணொளியைத் தாமே பதிவு செய்ததாகவும், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் காணொளியை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகவும் தெரிவித்தார்.

    மேலும், 26ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள நிலைமையின் காரணமாக, புத்தர் சிலை அமைந்துள்ள பகுதியில் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், 26 ஆம் திகதி அப்பகுதியில் காணப்பட்ட நீர்மட்டத்தை காட்டும் புகைப்படம் ஒன்றையும் எமக்கு அனுப்பி வைத்தார்.

    தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும், 2024ஆம் ஆண்டு அவர் பதிவு செய்த காணொளியை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார். 

    2026ஆம் ஆண்டு, அதாவது சமீபத்தில் நேபாளத்தைப் பாதித்த வெள்ள நிலைமை

    2026 ஆகஸ்ட் 26ஆம் திகதி, நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள லாங்டாங் லிருங் மலை உச்சிக்கு அருகில் பாரிய பனிப்பாறை உடைந்து சரிந்ததன் காரணமாகவும், 5.2 ரிக்டர் அளவிலான நில அதிர்வுடன் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தினாலும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தின்போது பனிக்கட்டிகள் மற்றும் பாறைச் சிதைவுகள் முதலில் திபெத் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள லெண்டே ஆற்றில் விழுந்து, ஆற்றின் ஓட்டத்தைத் தற்காலிகமாகத் தடுத்து இயற்கையான அணையொன்றை உருவாக்கியுள்ளன. சில நிமிடங்களிலேயே அந்த அணை பாரிய நீரழுத்தத்தின் காரணமாக உடைந்து, சுமார் 10 மீட்டர் உயரமுடைய பெரும் நீர்ப்பெருக்கு வேகமாக கீழ்நோக்கிய பள்ளத்தாக்குகளை நோக்கிப் பாய்ந்துள்ளது.

    இந்த நீர்ப்பெருக்கு சீன எல்லைப் பகுதியில் அமைந்துள்ள திபெத்தின் ஷிகாட்சே (Shigatse) பிராந்தியத்தில் உள்ள கியிரோங் (Gyirong) துறைமுக வர்த்தக மையத்தை முழுமையாக மூழ்கடித்ததுடன், பின்னர் லெண்டே கோலா, போதே கோஷி மற்றும் திரிசூலி ஆறுகள் வழியாக நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள சியாப்ருபேசி மற்றும் டிமுரே குடியிருப்புகளையும், நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்களில் ஆறுகளின் இருபுறங்களிலும் அமைந்திருந்த வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்புகளையும் சேதப்படுத்தியுள்ளது. இந்தப் பாரிய நீர்ப்பெருக்கு திரிசூலி ஆற்றின் வழியாக மேலும் கீழ்நோக்கிப் பாய்ந்து, நேபாளத்தின் முக்கிய நீர்ப்பிடிப்புகளில் ஒன்றான நாராயணி ஆற்றையும் பாதித்துள்ளது.

    சிலை அமைந்துள்ள சிட்வானைச் சென்றடையும் போது நீர்மட்டம் குறைந்திருந்தது

    இந்தச் சிலை அமைந்துள்ள சிட்வான் நகரத்தின் தலைமை மாவட்ட அதிகாரியின் தகவலின்படி, சிட்வான் மாவட்டத்திற்கு கடுமையான அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், நாராயணி ஆற்றின் வெள்ள நீர் சிட்வான் நகர எல்லையைச் சென்றடையும் போது, அதன் நீர்மட்டம் அபாயகரமான அளவைத் தாண்டவில்லை. இதனால் நகர்ப்புற பகுதிகள் கடுமையாக வெள்ளத்தில் மூழ்கவில்லை. தேவ்காட் பகுதியில் நாராயணி ஆற்றின் நீர்மட்டம் 9 மீட்டரைத் தாண்டினால் அது அபாயகரமானதாகக் கருதப்படுகிறது. எனினும், மேல்பகுதியில் இருந்து வந்த வெள்ள அலை சிட்வானைச் சென்றடைந்தபோது, அதன் அதிகபட்ச நீர்மட்டம் 6.57 முதல் 6.80 மீட்டர் வரையிலேயே பதிவாகியுள்ளது. அதன் பின்னர் நீர்மட்டம் வேகமாகக் குறைந்துள்ளது.

    மேலதிக தகவல்களை இங்கு, இங்கு மற்றும் இங்கு பார்க்கலாம்.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….


    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில், சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ள நிலைமையின்போது புத்தர் சிலை ஒன்று பாதிப்பின்றி இருப்பதைக் காட்டுவதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி, 2024ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள நிலைமையின்போது பதிவு செய்யப்பட்ட பழைய காணொளியாகும் என்பது கண்டறியப்பட்டது.

    குறித்த புத்தர் சிலை, நேபாளத்தின் சிட்வானில் நாராயணி ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள புத்தர் சிலையாகும். சமீபத்தில் நேபாளத்தைப் பாதித்த வெள்ள நிலைமை நாராயணி ஆற்றையும் பாதித்திருந்தது. எனினும், நாராயணி ஆற்றின் வெள்ள நீர் சிலை அமைந்துள்ள சிட்வான் நகர எல்லையைச் சென்றடையும் போது, அதன் நீர்மட்டம் அபாயகரமான அளவைத் தாண்டாததால், நகர்ப்புற பகுதிகள் கடுமையாக வெள்ளத்தில் மூழ்கவில்லை.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: நேபாள வெள்ளத்தில் புத்தர் சிலை பாதிப்பின்றி இருப்பதாக பகிரப்படும் காணொளி பழைய காணொளியாகும்!

    Fact Check By: Suji Shabeedharan

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-08-28

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.