Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோவை சிறைப்பிடிக்கும் போது எடுக்கப்பட்ட காணொளியா இது?

    2026-01-06
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : கடந்த சனிக்கிழமை வெனிசுவேலாவின் மீது அதிரடி தாக்குதல் மேற்கொண்ட அமெரிக்கா அந்நாட்டு ஜனாதிபதியான நிக்கோலஸ் மதுரோவை சிறைப்பிடித்த போது என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை


    INTRO :

    கடந்த சனிக்கிழமை வெனிசுவேலாவின் மீது அதிரடி தாக்குதல் மேற்கொண்ட அமெரிக்கா அந்நாட்டு ஜனாதிபதியான நிக்கோலஸ் மதுரோவை சிறைப்பிடித்த போது என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.



    தகவலின்விவரம் (What is the claim):

     Facebook Link  | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “BREAKING

    வெனிசுலா ஜனாதிபதி மதுரோவையும் அவரது மனைவியையும் அமெரிக்க இராணுவம் கைது செய்தது. “என இம் மாதம் 03 ஆம் திகதி 2026 ஆம்ஆண்டு  (03.01.2026) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    முதலில் நாம் குறித்த காணொளியில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ஆய்வு செய்தபோது, இது கடந்த வருடம் (2025) ஜுன் மாதத்தில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Instagram link

    குறித்த பதிவில் ஃபோர்ட் பிராக், வட கரோலினாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்  வருகையின் போது, அமெரிக்க இராணுவ பயிற்சி  என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    ஆகவே நாம் trump’s visit to Fort Bragg என்ற  என்ற Keyword இணை பயன்படுத்தி கூகுளில் தேடுதலில் ஈடுப்பட்டோம். குறித்த தேடலின் போது இணையத்தில் தற்போது வைரலாகின்ற காணொளியினை ஒத்த காணொளி MAGNO NEWS என்ற யுடியூப் தளத்தில் பதிவிட்டிருந்தமை எமக்கு கிடைக்கப்பெற்றது.

    மேலும் வெள்ளை மாளிகையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் குறித்த நிகழ்விற்கான புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    whitehouse

    வெனிசுவேலாவில் நடந்தது என்ன..?

    கடந்த சனிக்கிழமை (03.01.2025) வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைச் சிறைப்பிடித்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியுள்ளது.

    அந்த நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக தற்போதைய உப ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை (Delcy Rodríguez) நியமித்து வெனிசுவேலா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    இதனையடுத்து, வெனிசுவேலாவின் எண்ணெய் வளங்களை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் எனவும், தமக்குச் சாதகமான அரசாங்கம் அமையும் வரை அமெரிக்க இராணுவம் அங்கு நிலைகொண்டிருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

    இந்தச் சம்பவத்தையடுத்து வெனிசுவேலாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. BBC Tamil

    நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் வெனிசுவேலா ஜனாதிபதி மதுரோவை சிறைப்பிடிக்கும் போது எடுக்கப்பட்ட காணொளி என பகிரப்படும் காணொளி அமெரிக்க இராணுவம் பயிற்சியின் போது எடுக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok| Youtube

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

    Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-01-06

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.