Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ஸ்ரீஹரிகோட்டா பாலத்தை சந்திரயான் 3 லாரியில் எடுத்துச் செல்லப்படும் காட்சி என்று பரவும்வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-09-01
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    ‘’சந்திரயான் 3 லாரியில் ஸ்ரீஹரிகோட்டா செல்லும் காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம

    ‘’சந்திரயான் 3 லாரியில் ஸ்ரீஹரிகோட்டா செல்லும் காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு செய்தோம். 

    தகவலின் விவரம்:

    இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். 

    இதில், ‘’ ஸ்ரீஹரிகோட்டா பாலத்தை சந்திரயான் 3 லாரியில் கடக்கும் காட்சி’’, என்று எழுதப்பட்டுள்ளது. 

    பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  

    Facebook Claim Link l Archived Link 

    உண்மை அறிவோம்:

    இஸ்ரோ சார்பாக ஏவப்பட்ட சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ளது. 

    இந்நிலையில் ஏராளமான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சந்திரயான் 3 பெயரில் பகிரப்படுகின்றன. 

    Fact Crescendo Tamil link 1 l Fact Crescendo Tamil link 2

    இந்த வரிசையில் பகிரப்படும் மற்றொரு வீடியோதான் மேலே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட காட்சியும். உண்மையில் இது ஒரு வீடியோ கேம்… 

    JimNatelo என்பவர் இதுபோன்று நிறைய வீடியோக்களை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

    மேலும் ஒரு வீடியோவை உதாரணத்திற்காக இணைத்துள்ளோம். 

    நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ போன்றே அவர் வெளியிட்ட மற்றொரு வீடியோ கேம் காட்சி இதோ…

    இதன்படி, Spintires: MudRunner என்ற வீடியோ கேம் தொடர்பான காட்சிகளை எடுத்து, மேற்கண்ட வகையில், சந்திரயான் 3 லாரியில் செல்லும் காட்சி என வதந்தி பரப்பியுள்ளனர் என்று தெரியவருகிறது. 

    எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி தவறானது, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது. 

    முடிவு:

    உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம். 

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

    Facebook Page I Twitter PageI Google News Channel I Instagram

    Avatar

    Title:சந்திரயான் 3 லாரியில் ஸ்ரீஹரிகோட்டா பாலத்தைக் கடக்கும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

    Written By: Fact Crescendo Team 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    FCT

    Fact Crescendo Team

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-09-01

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.