Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    சமூக ஊடகங்களில் பகிரப்படும் இராட்சத பாம்பின் காணொளி!

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-08-05
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    இராட்சத பாம்பொன்று காட்டுப்பகுயில் இருந்து ஆற்றுக்குள் செல்வதனைப் போன்ற காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றது. எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the c

    இராட்சத பாம்பொன்று காட்டுப்பகுயில் இருந்து ஆற்றுக்குள் செல்வதனைப் போன்ற காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றது.

    எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived link

    வியப்பின் உச்சம் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளியானது இன்று (2025.08.05) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    உண்மையில் இவ்வாறானதொரு இராட்சத பாம்பு தென்பட்டிருப்பின் அது தொடர்பில் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளையும் காணமுடியவில்லை.

    மேலும் குறித்த காணொளி இலங்கையின் பிரபல ஊடகமொன்றின் பேஸ்புக் பக்கத்திலேயே பிரதானமாக வெளியாகியிருந்தது. எனவே நாம் அந்த பதிவிற்கு வந்த கமெண்ட்கள் தொடர்பில் ஆராய்ந்த போது, பலர் இந்த காணொளி போலியானது மற்றும் AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டது என்ற விதத்தில் கமெண்ட் செய்திருப்பதனையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

    மேலும் நாம் இந்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது, anaconda videos என்ற டிக்டொக் பக்கதில் இந்த காணொளியானது வெளியாகியிருந்தமையை எம்மால் காணமுடிந்தது. 

    அதில் இந்த காணொளி AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்று எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    அத்துடன் நாம் குறித்த டிக்டொக் பக்கத்தை ஆய்வு செய்தபோது அதில் இவ்வாறு AI ஆல் உருவாக்கப்பட்ட பல அனகோண்டா பாம்புகளின் காணொளிகள் மாத்திரமே காணப்பட்டதுடன், அந்த பக்கத்தில் பொழுது போக்கிற்காக உருவாக்கப்பட்ட  AI காணொளிகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.

    இதன் காரணமாக நாம் குறித்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம். இதன் போது குறித்த காணொளியானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

    எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….


    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok| Youtube

    Conclusion: முடிவு

    இதற்கமைய எமது ஆய்வின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த இராட்சத பாம்பின் காணொளியானது, போலியானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டது.

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

    Avatar

    Title:சமூக ஊடகங்களில் பகிரப்படும் இராட்சத பாம்பின் காணொளி!

    Fact Check By: Suji Shabeedharan 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-08-05

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.