Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    மனித DNA இல் உருவாக்கப்பட்ட இரண்டு தலை பாம்பு என பகிரப்படும் காணொளி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-10-22
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    மனித DNA இல் உருவாக்கப்பட்ட இரண்டு தலை பாம்பு என தெரவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வான்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): Facebook |

    மனித DNA இல் உருவாக்கப்பட்ட இரண்டு தலை பாம்பு என தெரவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

    எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வான்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):


    Facebook | Archived Link

    மனித டிஎன்ஏ ல உருவாக்கப்பட்ட இரண்டு தலை பாம்பு என தெரவிக்கப்பட்டு குறித்த காணொளியானது 2025.10.17 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த காணொளியானது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டதாகவும், அது போலியானது எனவும் பலர் கமென்ட் செய்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

    மேலும் குறித்த காணொளியில் மனிதனின் DNA இல் உருவாக்கப்பட்ட பாம்பு என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதில் ஒரு மீனே காணப்படுகின்றது.

    அத்துடன் உண்மையில் மனிதனின் DNA இல் இவ்வாறான உயிரினம் உருவாகியிருந்தால் அது குறித்து பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.

    மேலும் மனிதனின் DNA இல் ஒரு பாம்பு அல்லது வேறு எந்த உயிரினம் உருவாக்கப்படுவதாக இருந்தாலும் அதற்கு உலகளாவிய அமைப்புகளின் அங்கீகாரம் வேண்டும் அதுமட்டுமன்றி இந்த காணொளியில் இருக்கும் மீன் இயற்கைக்கு மாறாக இருப்பதனையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.


    எனவே நாம் குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேறகொண்ட போது இன்ஸ்டகிராம் பக்கமொன்றில் குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.

    இருப்பினும் அதில் இந்த காணொளி குறித்த எந்த விளக்கமும் வழங்கப்பட்டிருக்கவில்லை. எனவே நாம் அந்த பக்கத்தினை ஆய்வு செய்தபோது அதில் இவ்வாறு விலங்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பல காணொளிகளை எம்மால் காணமுடிந்தது.



    எனவே நாம் இந்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது இந்த காணொளியானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.





    எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok| Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில்  மனிதனின் DNA இல் உருவாக்கப்பட்ட இரண்டு தலை பாம்பு என பகிரப்படும் காணொளி போலியானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 


    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

    Avatar

    Title:மனித DNA இல் உருவாக்கப்பட்ட இரண்டு தலை பாம்பு என பகிரப்படும் காணொளி உண்மையா?

    Fact Check By: Suji shabeedharan 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-10-22

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.