
INTRO :
அண்மையில் ‘அம்பாறை சேனநாயக்க சமுத்திரத்தின் அழகியல்’ என குறிப்பிடப்பட்டு ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” படப்பிடிப்பிற்காக இலங்கையில் தளபதி விஜய் ❤️🫰
Copied 😊 “ என இம் மாதம் 05 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (05.01.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேற்கண்ட பதிவில் ‘’அம்பாறை D S சேன நாயக்க சமுத்திரம் பரப்பளவு மற்றும் அதன் உயரம் “ என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பலராலும் பகிரப்பட்டும் இருந்தது. மேலும் அந்த காணொளியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சேனநாயக்க சமுத்திரத்தின் கதவுகள் திறக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
உண்மையில், கடந்த ஜனவரி 10ம் திகதி கிழக்கு மாகாணம் முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக D S சேனநாயக்க சமுத்திர வான்கதவுகள் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டன.
இது பல ஊடகங்களிலும் முதன்மையான செய்தியாகக் கூறப்பட்டது. மேலும், பல சமூக ஊடக பதிவுகளும் சேனநாயக்க சமுத்திரத்தின் கதவுகள் திறப்பு பற்றி பகிரப்பட்டதும் உண்மை.
மேலும் வாசிக்க ஆனால் இந்த காணொளியில் இடம்பெறும் அணை D S சேனநாயக்க சமுத்திரம் அல்ல. அது அனுராதபுர மாவட்டத்தை சேர்ந்த கலாவெவ (கலாவாவி) ஆகும்.
காணொளியில் காட்டப்படும் அணையின் படம்


DS சேன நாயக்க அணையின் உண்மையான புகைப்படங்கள்


கலாவெவ அணையின் தோற்றம் (காணொளி)

இந்த காட்சிகள் மூலம் குறித்த காணொளியில் குறிப்பிடப்படுவது DS சேனநாயக்க சமுத்திரம் அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.
மேலும் காணொளியில் கூறப்பட்ட விடயங்கள் சரியானதாகும். அவை டிஎஸ் சேனநாயக்க சமுத்திரம் பற்றிய தரவுகள்தான்; ஆனால் காட்சிப்படுத்தப்படும் காணொளி கலாவாவி அணையினது ஆகும்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:டிஎஸ் சேனநாயக்க சமுத்திரம் என சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி உண்மையா?
Written By: S.G.PrabuResult: Misleading



