
INTRO :
நெதன்யாகுவின் உரையின் போது ஐ.நா. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்கள் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில்“ ஆறுகள் பின்னோக்கிப்
பாய்வதில்லை…!!
நெதன்யாகுவின் உரையின் போது
ஐ.நா. உறுப்பினர்கள் வெளிநடப்பு
செய்தனர்
@highlight “என இம் மாதம் 23 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு (23.09.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சமூகவலைத்தளத்தில் பகிரப்படும் குறித்த காணொளியின் சில காட்சிகளை நாம் புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தினோம். அதன்போது, குறித்த காணொளியானது கடந்த வருடம் செம்டெம்பர் மாதம் 27 (27.09.2024) இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பாக சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தமையும் எமது ஆய்வின் போது காணக்கிடைத்தது. theguardian.com | dailymail
மேலும் இன்று (26.09.2025) நடைப்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் உரையாட நிவ்யோர்க்கினை சென்றடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்திருந்தமை காணக்கிடைத்தது. timesofisrael.com | theguardian.com | ndtv.com
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நெதன்யாகுவின் உரையின் போது ஐ.நா. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என பகிரப்படும் காணொளி கடந்த வருடம் (2024) இடம்பெற்ற சம்பவம் என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:நெதன்யாகுவின் உரையின் போது ஐ.நா. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனரா..?
Fact Check By: S.G.PrabuResult: Misleading



