
INTRO :
உயிருக்கு பயந்து நடுங்கிய இஸ்ரேல் வீரர் என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” உலகம் முழுவதையும் வைரலாகும் காணொளி😂😂
உயிருக்கு பயந்து நடுங்கும் இவர் காசா யுத்தத்தில் ஈடுபட முடியாது என்றும் தனக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படுவதாகவும் கூறி அழுகின்றார். ஹமாசுக்கு பயந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு தப்பினால் போதும் என நினைத்து கதறியலும் இஸ்ரேலிய இராணுவம். “ என கடந்த மாதம் 02 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (02.02.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வுசெய்த போது, YOSEF என்ற டிக்டொக் கணக்கில் உள்ள நபர் குறித்த வீடியோ பதிவினை மேற்கொண்டுள்ளமை காணக்கிடைத்தது.
மேலும் குறித்த வீடியோவை அவர் கணக்கில் இருந்து நீக்கியுள்ளதையும் காணக்கிடைத்தது. தொடர்ந்து ஆய்வு செய்த போது, சர்வதேச உண்மை பரிசோதனை செய்யும் சில ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையில் அந்த வீடியோ பதிவின் ஸ்கீரின் ஷாட் மட்டுமே எமக்கு கிடைக்கப்பெற்றது.

நாம் குறித்த டிக்டொக் கணக்கினை ஆய்வு செய்த போது, இவரினால் இது போன்ற பல வீடியோக்கள் உருவாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது.

அவரின் டிக்டொக் கணக்கினை ஆய்வு செய்த போது, இவர் இஸ்ரேல் நாட்டின் இராணுவ பயிற்சி பெறும் இராணுவ வீரர் என அறியமுடிகின்றது. மேலும் இவரது பல வீடியோக்கள் இராணுவ முகாமில் இருந்து எடுத்துள்ளமையும் காணக்கிடைத்தது.

இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், உயிருக்கு பயந்து நடுங்கிய இஸ்ரேல் வீரர் என்று பரவும் வீடியோ போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:உயிருக்கு பயந்து நடுங்கிய இஸ்ரேல் வீரர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: S.G.PrabuResult: False



