சிங்கர் நிறுவனம் வழங்கும் ஆண்டு விழா பரிசை அனைவரும் பெறலாம் என தெரிவித்து Link உடனான ஒரு தகவல் தற்போது வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை அவதானிக்க முடிந்தது.
எனவே அந்த link தொடர்பான உண்மையை கண்டறியுமாறு வாசகர்களிடம் இருந்து வந்த கோரிக்கைக்கு அமைய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் அதுகுறித்த ஆய்வை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சிங்கர் வழங்கும் ஆண்டு விழா பரிசு என தெரிவிக்கப்பட்டே இந்த தகவல் பெரும்பாலும் வட்ஸ்அப்பில் பகிரப்பட்டு வருகின்றது.
Fact Check (உண்மை அறிவோம்)
Singer நிறுவனம் உண்மையில் இவ்வாறான பரிசுகளை வழங்குவதாக இருந்தால் அது குறித்து அவர்களின் உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்கள் ஊடாக அறிவித்தலை விடுத்திருப்பார்கள் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் Singer நிறுவனம் அவ்வாறான எந்த அறிவித்தல்களையும் விடுக்கவில்லை என்பது உறுதியானது.
அடுத்ததாக பரிசுத் தருவதாக Whatsapp இல் பகிரப்பட்ட இணைய முகவரி மற்றும் Singer நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணைய முகவரிகளை நாம் ஆய்வு செய்த போது அவை இரண்டும் வேறுபட்ட முகவரிகளாகவே காணப்பட்டன.
எனவே நாம் Whatsapp இல் பகிரப்பட்ட link ஐ கணணியில் திறக்க முடியுமா என முற்சித்த போது அதனை கணணி ஊடாக திறக்க முடியவில்லை. எனவே நாம் அந்த link ஐ கையடக்கத்தொலைபேசி ஊடாக திறக்க முடியுமா என முயற்சித்த போது அதனை தொலைபேசி ஊடாக திறக்க கூடியதாக இருந்தது.
அதன்பின்னர் நாம் அந்த இணைப்பின் ஊடாக உட்சென்று பார்த்தபோது அதில் எமது தனிப்பட்ட விபரங்கள் கோரப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிந்தது.

அதேபோன்று அதில் இருந்த கமென்ட்களை நாம் பார்க்கும் போது அவை அனைத்தும் கிட்டதட்ட ஒரே விதமான கமென்ட்களாக இருந்ததுடன் கமென்ட் செய்திருப்பவர்கள் தமிழ் மொழியில் கமென்ட் செய்திருந்தாலும் அவர்களின் பெயர்கள் சிங்கள மொழியில் காணப்பட்டமை சந்தேகத்தை எழுப்பக கூடியதாகவே இருந்தது.

Singer நிறுவனம்
சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பில் நாம் Singer நிறுவனத்தை தொடர்புகொண்டு வினவியபோது, அவ்வாறான எந்தவித பரிசுகள் வழங்கும் திட்டங்களும் சிங்கர் நிறுவனத்தினால் அறிவிக்கப்படவில்லை எனவும் இதுவொரு மோசடியான இணைப்பு என்பதனையும் அவர்கள் எமக்கு உறுதிப்படுத்தினர். மேலும் அவ்வாறு வரும் இணைப்புகளை கிளிக் செய்யவோ அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை வழங்கவோ வேண்டா என சிங்க நிறுவனம் கேட்டுக்கொண்டது. அதையும் தாண்டி ஏதேனும் தகவல்களை அந்த இணைப்பின் ஊடாக நுகர்வோர் வழங்கி அதன் மூலம் அவர்கள் மோசடிக்கு உள்ளாகியிருப்பார்களாயின் அது தொடர்பில் சிங்கர் நிறுவனம் எந்தவித பொறுப்பும் ஏற்காது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT)
இது தொடர்பில் நாம் இலங்கை கணிணி அவசர தயார்நிலை குழுவிடம் கேட்டபோது, இதுவொரு மோசடி எனவும், இவ்வாறான பதிவுகள் மூலம் மக்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் வங்கி வைப்புகள் திருடப்படுகின்றது, எனவே இது தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த வகையான போலி செய்திகளை எவ்வாறு அடையாளம் காண்பது?
- அதிகாரப்பூர்வமற்ற இணையதள முகவரிகள் (URLs): அவர்கள் அனுப்பும் லிங்க் (Link) Singer Sri Lanka நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியாக இருக்காது.
- தனிப்பட்ட விபரங்களை சேகரித்தல்: பரிசுப் பொருட்களைப் பெற உங்கள் பெயர், தொலைபேசி இலக்கம், வங்கி விபரங்கள் போன்றவற்றை உள்ளீடு செய்யக் கோருவார்கள்.
- பகிர்வதற்கான நிபந்தனைகள்: “இந்த செய்தியை மேலும் 5 முதல் 10 வாட்ஸ்அப் குழுக்களுக்குப் பகிர்ந்தால் மட்டுமே பரிசு கிடைக்கும்” என்ற நிபந்தனை இருக்கும்.
Also Read: SCAM Alert: சரிபார்க்காமல் தெரியாத இணைப்புகளுக்குள் உட்செல்வதை தவிர்க்கவும்!
SCAM Alert: ஒன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு தொடர்பில் அவதானமாக செயற்படுங்கள்!
பஜாஜ் நாமத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் அவதானம்!
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் Singer நாமத்தை பயன்படுத்தி ஆண்டு விழா பரிசுகள் கிடைக்கும் என தெரிவித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவல் போலியானது என்பதுடன் சிங்கர் நாமத்தை பயன்படுத்தி இவ்வாறு இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு சிங்கர் நிறுவனம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக நாம் இவற்றை SCAM என்றே அழைக்கிறோம், மேலும் இதுபோன்ற தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் அவதானத்துடன் இருக்குமாறும், இதுபோன்ற இணைப்புகளால் ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



