Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    அநுராதபுரத்தில் இடம்பெற்ற SLPP பேரணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-09-17
    6 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஏற்பாடு செய்த “ஜன சடன” என்ற மக்கள் பேரணி 2026 செப்டெம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் நகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. குறித்த பேரணி நிறைவடைந்த பின்னர், அது தொடர்பாக சமூக ஊடகங்கள

    Subscribe to our WhatsApp Channel

    INTRO

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஏற்பாடு செய்த “ஜன சடன” என்ற மக்கள் பேரணி 2026 செப்டெம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் நகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. குறித்த பேரணி நிறைவடைந்த பின்னர், அது தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் பதிவுகள் பகிரப்பட்டதனை அவதானிக்க முடிந்தது. 

    எனவே அந்த பதிவுகள் தொடர்பான உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link

    குறித்த பதிவில் இரண்டாண்டு ஆட்சி மகிந்தவின் எழுச்சி…

    ஒரே நாளின் இரண்டு நிகழ்வுகள்…

    ஒன்று ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சியின் பொலனறுவை பொதுக்கூட்டம்…

    அடுத்தது நாமல் ராஜபக்ச ஒழுங்கமைத்து முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் தலைமையில் நடைபெற்ற மொட்டுக்கட்சியின் அனுராதபுர கூட்டம்…

    பெரும் திரளாக சிவப்பாக இருப்பது அனுரவின் கூட்டமென நினைக்கவேண்டாம்… அதுதான் மொட்டுக்கட்சியின் கூட்டம்… 🚶

    மூன்றாண்டுகளுக்கு முன் வெளியே தலைகாட்டக்கூட முடியாமல் விரட்டியடிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச அணி அனுரவின் ஆட்சியில் அடைந்திருக்கும் பரிணாமம் இது… என தெரிவிக்கப்பட்டு இரண்டு புகைப்படங்கள் பகிரப்பட்டிருந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    கடந்த செப்டெம்பர் 12ஆம் திகதி அநுராதபுரம் நகர சபை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணி, பிரதான ஊடகங்கள் மற்றும் இலங்கை பொதுஜன பெரமுனவின் சமூக ஊடகப் பக்கங்கள் ஊடாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அந்த நேரடி ஒளிபரப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. எனினும், மக்கள் பேரணியின் நேரடி ஒளிபரப்பின்போது, மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் காணப்படும் புகைப்படத்தில் உள்ள காட்சிகளை அடையாளம் காண முடியவில்லை. 

    YouTube 

    மேலும், குறித்த மக்கள் பேரணி தொடர்பான ட்ரோன் காட்சிகள் உள்ளிட்ட புகைப்படங்களும் பிரதான ஊடகங்கள் மற்றும் பொதுஜன பெரமுனவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளன. 

    அதன் அடிப்படையில் நாம் மேற்கொண்ட ஆய்வில், மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் பெருமளவிலான மக்கள் கூட்டம் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள முதலாவது புகைப்படம், பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணி தொடர்பாக வெளியிடப்பட்ட எந்தவொரு அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையிலும் அல்லது நம்பகமான அதிகாரப்பூர்வ மூலத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட எந்தவொரு செய்தியிலும் இடம்பெறவில்லை என்பது தெளிவாகியுள்ளது. 

    புகைப்படத்தில் காணப்பட்ட இயற்கைக்கு மாறான தன்மை

    மேலும், மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவின் ஊடாக அநுராதபுரம் மக்கள் பேரணியின் புகைப்படம் எனக் குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சில இயற்கைக்கு மாறான தன்மைகளை அவதானிக்க முடிகிறது. அவற்றில் ஒரு புகைப்படத்தில், மக்கள் பேரணியின் மேடைக்குப் பின்னாலும் மக்கள் திரண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. அதேபோன்று, மற்றொரு புகைப்படத்தில் ஒரே மாதிரியான நபர்கள் ஒரே புகைப்படத்தின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படுகின்றனர். மேலும், சில புகைப்படங்களின் பின்னணியில் காணப்படும் வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் உள்ளிட்டவற்றில் எழுத்துப் பிழைகளையும் அவதானிக்க முடிகிறது.

    பொதுஜன பெரமுன மக்கள் பேரணியின் உண்மையான புகைப்படங்களுடனான ஒப்பீடு

    பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மக்கள் பேரணி தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் மற்றும் நேரடி ஒளிபரப்பை ஆய்வு செய்தபோது, அவற்றில் காணப்படும் காட்சிகளுக்கும் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவின் ஊடாக வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தின் இடையில் குறிப்பிடத்தக்க முரண்பாடுகள் காணப்படுவது தெளிவாகிறது.

    பொதுஜன பெரமுன மக்கள் பேரணியின் காட்சிகள் என மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படம், பொதுஜன பெரமுன மக்கள் பேரணியின் உண்மையான புகைப்படங்களுக்கும் இடையிலான ஒப்பீடு கீழே வழங்கப்பட்டுள்ளது.

    செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படங்கள்

    மேற்குறிப்பிட்ட இயற்கைக்கு மாறான அம்சங்களைக் கருத்திற்கொண்டு, மேற்குறிப்பிட்ட புகைப்படம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை அடையாளம் காணக்கூடிய கருவிகளைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டோம். அதன் அடிப்படையில், குறித்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகியுள்ளது.

    மேலும் நாம் அந்த பதிவில் பகிரப்பட்டிருந்த இரண்டாவது புகைப்படம் ஜனாதிபதியின் பொலன்னறுவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அது தொடர்பிலும் நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, அது கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில்  பொலன்னறுவையில் நடைபெற்ற ‘நமது அரசாங்கத்திற்கு  ஈராண்டு ஆட்சி – நாட்டிற்கு நன்மை என்ற தொினப்பொருளில்’ இடம்பெற்ற விவசாயிகள் பேரணியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது உண்மை என்பது தெளிவாகின்றது.

    Claim 2: 

    இலங்கை பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல்வாதிகள் மற்றும் பௌத்த பிக்குவொருவர் ஒரே மேசையைச் சுற்றி அமர்ந்திருப்பதுடன், மேசையின் மீது மதுபான போத்தல்கள் சில வைக்கப்பட்டிருப்பதையும் காண்பிக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தது.

    Facebook | Archived Link

    Fact Check (உண்மை அறிவோம்)

    மேற்கண்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படம் உண்மையானதா என்பதைச் சரிபார்க்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். எனினும், உறுதிப்படுத்தக்கூடிய எந்தவொரு ஆதாரத்திலும் குறித்த புகைப்படம் பதிவிடப்பட்டிருந்ததற்கான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

    புகைப்படத்தில் காணப்படும் இயற்கைக்கு மாறான அம்சங்கள்

    மேற்கண்ட புகைப்படத்தை நெருக்கமாக ஆய்வு செய்தபோது, அதில் இயற்கைக்கு மாறான சில அம்சங்களை அடையாளம் காண முடிந்தது. குறிப்பாக, படிக்கட்டுக்கு அருகில் நின்றுகொண்டிருக்கும் நபர்களின் கைகளில் உள்ள விரல்கள் மற்றும் கைகளின் அமைப்பை அவதானிக்கும்போது, அவை இயல்பற்றதாகவும் ஒன்றுக்கொன்று பொருந்தாத வகையிலும் காணப்படுகின்றன. மேலும், மேசையின் மீது வைக்கப்பட்டுள்ள போத்தல்கள் மற்றும் கண்ணாடிப் பாத்திரங்கள் மீது ஒளி படும் விதமும், அவற்றில் காணப்படும் ஒளிப் பிரதிபலிப்புகளும் சுற்றியுள்ள சூழலின் ஒளி அமைப்புடன் பொருந்தாததாகத் தெரிகிறது.

    செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படம்

    மேற்கண்ட இயற்கைக்கு மாறான அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, குறித்த புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கண்டறியும் பல்வேறு கருவிகளுக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். இதன் மூலம், குறித்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகத் தெரியவந்தது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் கடந்த 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பேரணியின் போது எடுக்கப்பட்டதாக பகிரப்பட்ட புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பது கண்டறியப்பட்டது.

     இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: அநுராதபுரத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன பேரணியின் போது எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

    Fact Check By: Suji Shabeedharan

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-09-17

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.