
INTRO
நேபாள வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
பேரழிவை கண்முன் காட்டிய நேபாள வெள்ளம்! என தெரிவிக்கப்பட்டு இந்த காணொளியானது கடந்த 2026.08.27 ஆம் திகதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் இந்த காணொளி தொடர்பில் நன்கு ஆராய்ந்த போது அந்த காணொளியானது பல்வேறு காணொளிகளை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு காணொளி என்பதனை அறியமுடிந்தது. எனவே அந்த காணொளிகளை நாம் தனித்தனியாக ஆய்விற்கு உட்படுத்தினோம்.
முதலாவது காட்சி
இதன்போது, இந்த காணொளியில் இணைக்கப்பட்டுள்ள முதலாவது காணொளி தொடர்பில் நாம் ஆராய்ந்த போது அந்த காணொளியானது கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவின் எல்ப்ரஸ் மலையிலிருந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த மண் சரிவு, டர்னியாஸ் நகரை வெள்ளத்தில் மூழ்கடித்த போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.
இதனால் தண்ணீர் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டதுடன், வீடுகள், நெடுஞ்சாலைகள் மற்றும் நகரின் உயிர்நாடியாக விளங்கும் பாலமும் சேதமடைந்தன.

அதனடிப்படையில் இந்த காணொளியில் இணைப்பட்ட முதலாவது காட்சியானது நேபாள வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி அல்ல என்பது உறுதியானது.
இரண்டாவது காட்சி
இதில் இணைக்கப்பட்டுள்ள இரண்டாவது காணொளியானது 2021 ஆம் ஆண்டு ஜுலை 3 ஆம் திகதி மத்திய ஜப்பானில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து அட்டாமி நகரில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.
பல சர்வதேச ஊடகங்களிலும் இந்த காணொளியானது அந்த காலப்பகுதியில் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது காட்சி
மூனடறாவதாக இணைக்கப்பட்ட காட்சி தொடர்பில் நாம் ஆராய்ந்த போது அது 2025 ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் காட்சி என்பதனை அறியமுடிந்தது.
நான்காவது காட்சி
நான்காவது காட்சி தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்டபோது அது 2020 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் கோரோன்டாலோ (Gorontalo) eகரில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.Link | Link

ஐந்தாவது காட்சி
ஐந்தாவதாக இணைக்கப்பட்ட காணொளியானது 2023 ஆம் வடக்கு ஆர்ஜென்டினாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஒரு பெரிய சேற்று அலை ஒரு பாலத்தை முழுவதுமாக அடித்துச் செல்லும் காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது. Link

ஆறாவது காட்சி
ஆறாவது காணொளியானது 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.
ஏழாவது காட்சி
இந்த காட்சியானது அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் கடந்த 2026.08.26 ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ள நிலையின் போது எடுக்கப்பட்ட காணொளி என தெரிவித்து பகிரப்பட்ட காணொளியானது உலகின் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது எடுக்கப்பட்ட பழைய காணொளிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட ஒரு காணொளி என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



