INTRO :
ரஷ்யா கடற்கரைக்கு கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் என காணொளியொன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில்“ரஷ்யா கடற்கரைக்கு கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் “என இம் மாதம் 30 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு (30.07.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது குறித்து பிரதான ஊடகங்களில் எதும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா என ஆய்வினை முதலில் மேற்கொண்ட வேளையில், அவ்வாறு எவ்விதமான செய்திகளும் வெளியாகி இருந்தமை காணக்கிடைக்கவில்லை.
நாம் குறித்த காணொளியினை புகைப்படங்களாக மாற்றி ஆய்வினை மேற்கொண்டபோது, இது கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி குறித்த காணொளியுடன் வெளியாகியிருந்த செய்தியை எமக்கு கிடைக்கப்பெற்றது.
குறித்த செய்தியில் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஐந்து பெலுகா திமிங்கலங்களை உள்ளூர் மீனவர்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. News link
இச்சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியும் கிடைக்கப்பெற்றது
அத்துடன் சர்வதேச ஊடகங்களிலும் இந்த காணொளியானது ரஷ்யாவில் இடம்பெற்ற சுனாமியுடன் தொடர்புடையது அல்லவென வெளியிடப்பட்டிருந்தமையையும் காணமுடிந்தது. Link
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ரஷ்யா கடற்கரைக்கு கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் என பரவும் காணொளி தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:ரஷ்யா கடற்கரைக்கு கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் என பரவும் காணொளிகள் உண்மையா..?
Fact Check By: S.G.PrabuResult: False



