Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ஆர்ஜன்டீனாவில் கடல் பின் வாங்கியமைக்கான உண்மையான காரணம் என்ன?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-09-14
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO ஆர்ஜன்டீனா நாட்டின் மார் டெல் பிளாட்டா (Mar del Plata) கடற்கரைப் பகுதியில் கடந்த 2026 செப்டம்பர் தொடக்கத்தில்  கடல் நீர் திடீரென பல கிலோமீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய சம்பவம் இடம்பெற்றது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்

    Subscribe to our WhatsApp Channel

    INTRO

    ஆர்ஜன்டீனா நாட்டின் மார் டெல் பிளாட்டா (Mar del Plata) கடற்கரைப் பகுதியில் கடந்த 2026 செப்டம்பர் தொடக்கத்தில்  கடல் நீர் திடீரென பல கிலோமீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய சம்பவம் இடம்பெற்றது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடல் நீர் முற்றிலும் வற்றிவிட்டதாகவும், இது உலக அழிவின் அறிகுறி என்றும் பல தகவல்கள் பகிரப்பட்டன.

    எனவே உண்மையில் ஆர்ஜன்டீனாவில் கடல் உள்வாங்கியதற்கான காரணம் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட தகவலின் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link

    குறித்த பதிவில் ஆர்ஜென்டினாவில் பெரும் கடல் வற்றியது – கப்பல்கள் தத்தளிப்பு, உயிரினங்கள் தவிப்பு

    உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டினாவில் கடல் நீர் பெருமளவு வற்றிய சம்பவம் நடந்துள்ளது.

    இந்த இயற்கை காட்சி கடற்கரை பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடல் நீர் வற்றியதால் கப்பல்கள் கடலில் தத்தளித்து வருவதாகவும், கடல் உயிரினங்கள் பெருந்தொகையில் கரை ஒதுங்கி தவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த அசாதாரண நிகழ்வுக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வாளர்கள் மற்றும் கடல்சார் வல்லுநர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். வலுவான காற்று, கடல் அலைகளின் மாற்றம் அல்லது இயற்கை பேரிடரின் அறிகுறியாக இது இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

    இதனால் அப்பகுதி மீனவர்கள் மற்றும் கடலோர மக்கள் அச்சத்தில் உள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

    இது தொடர்பான மேலும் விவரங்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.

    தெரிவித்து நேற்று (2026.09.11) பகிரப்பட்டிருந்தது.

    மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

    Fb

    ஆர்ஜென்டினாவில் கடல் நீர் பெருமளவில் வற்றிய காட்சி பார்ப்பவர்களின் மனதை உலுக்குகிறது…

    கடலில் செல்ல வேண்டிய கப்பல்கள் கரையில் நிற்க, நீரை நம்பி வாழும் கடல் உயிரினங்கள் பெருந்தொகையில் தவிக்கும் காட்சிகள் உண்மையிலேயே வேதனையளிக்கின்றன.

    இயற்கையை நாம் காயப்படுத்திக் கொண்டே சென்றால், ஒருநாள் இயற்கையே நமக்கு பதில் சொல்லும்…

    இயற்கையை காப்போம்…

    கடலை காப்போம்…

    உயிர்களையும் காப்போம்!

    இது வெறும் காட்சி அல்ல… எதிர்காலத்திற்கான ஓர் எச்சரிக்கை!

    இதனை பலரும் சமூக ஊடங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இந்தக் காணொளிகளில் கடலடிப் பகுதியின் பெரும் பகுதி வெளிப்பட்டிருப்பதுடன், படகுகள் கரையில் சிக்கியிருப்பதையும், தண்ணீரிலிருந்து புதிய தீவு போன்ற பகுதி ஒன்று தோன்றியிருப்பது போன்ற காட்சிகளையும் காண முடிகிறது. சில பதிவுகள் இந்த நிகழ்வை “உலகளாவிய பேரழிவு” என்றும், “உலக அழிவின் அறிகுறி” என்றும் குறிப்பிட்டுள்ளன.

    நாம் இது குறித்து சர்வதேச ஊடக அறிக்கைகள் ஊடாக ஆய்வு செய்த போது, கடல் பின்வாங்குவதைக் காட்டும் காணொளிகள் உண்மையானவை. எனினும், கடல் நிரந்தரமாக “வற்றிவிட்டது”  அல்லது கடல் காணாமல் போய் விட்டது என்ற கூற்றுகள் தவறானவை என்பதனை அறியமுடிகின்றது. இது உலகளாவிய பேரழிவு அல்ல. மாறாக, வானிலை சார்ந்த காரணிகளால் ஏற்பட்ட தற்காலிக இயற்கை நிகழ்வாகும்.

    அர்ஜென்டினாவில் உண்மையில் என்ன நடந்தது?

    வைரலாகப் பரவும் காணொளிகள், ஆர்ஜன்டீனாவின் புவெனஸ் அயர்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள முக்கிய கடற்கரை சுற்றுலா நகரமான மார் டெல் பிளாட்டா (Mar del Plata) பகுதியில் பதிவு செய்யப்பட்டவை.

    பல மணி நேரத்திற்குள் கடற்கரையிலிருந்து கடல் நீர்மட்டம் கணிசமாகப் பின்வாங்கியது. ஆர்ஜன்டீனாவின் முன்னணி பத்திரிகையான La Nación வெளியிட்ட தகவலின்படி, கடல் நீர் வழக்கமாக மூடியிருக்கும் Restinga del Faro எனப்படும் நிரந்தரமான பாறைப் பகுதி இதனால் வெளிப்பட்டுள்ளது.

    இந்தப் பாறைப் பகுதி வழக்கமாக கடலுக்கு அடியில் இருப்பதால், அது திடீரென வெளிப்பட்டபோது, அங்கு புதிதாக ஒரு தீவு தோன்றியிருப்பது போன்று சுற்றுலாப் பயணிகளுக்குத் தோன்றியது. எனினும், வழக்கமான அலைச்சுழற்சி நிறைவடைந்த பின்னர், கடல் நீர் மீண்டும் இயல்பான மட்டத்திற்குத் திரும்பியுள்ளது.

    எவ்வாறாயினும், மேற்கண்ட காணொளியில் ஆர்ஜடீனாவின் கடல் வற்றியதாக பகிரப்படும் காணொளியானது, ஆர்ஜன்டீனாவில் கடல் பின்வாங்கிய காட்சியல்ல. மாறாக, இந்தக் காணொளி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள அலாங் கப்பல் உடைக்கும் தளம் (Alang Ship Breaking Yard) தொடர்பானதாகும்.

    அலாங் உலகின் மிகப்பெரிய கப்பல் மறுசுழற்சி மையமாகும். இங்கு பெரிய சரக்குக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் துரப்பணக் கப்பல்கள், அதிக அலை (High tide) நிலவும் நேரங்களில் கடற்கரையில் உள்ள சேறு நிறைந்த பகுதிக்கு இயற்கையாகத் தள்ளப்பட்டு நிறுத்தப்படுகின்றன. வழக்கமான அலை மாற்றத்தின் காரணமாக கடல் மட்டம் குறையும் போது (Low tide), இந்தக் கப்பல்கள் சேற்றுப் பகுதியில் சிக்கிக் கொள்கின்றன. பின்னர், அங்குள்ள பணியாளர்களால் இந்தக் கப்பல்கள் பல்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

    இலங்கையிலும் இதே காணொளி முன்னதாக சுனாமி நிலைமை ஏற்பட்டதாகக் கூறி பகிரப்பட்டிருந்தது. இது தொடர்பாக நாம் மேற்கொண்ட உண்மைச் சரிபார்ப்பு அறிக்கையை இங்கே காணலாம்.

    கடல் ஏன் பின்வாங்கியது?

    இந்த அசாதாரணமான கடல் பின்வாங்கலுக்கு பல தற்காலிக இயற்கைக் காரணிகளே காரணமாக அமைந்துள்ளன.

    இந்த தகவல் தொடர்பில் கடல்சார் ஊடகமான Pescare வெளியிட்ட தகவலின்படி, கரையிலிருந்து திறந்த கடலை நோக்கி நீண்ட நேரம் பலத்த காற்று வீசும்போது, கடற்கரைப் பகுதிகளில் உள்ள மேற்பரப்பு நீரை கடலுக்குள் தள்ளக்கூடும். இதனால் கடற்கரைப் பகுதியில் கடல் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்தது போன்று தோன்றலாம் என குறிப்பிட்டுள்ளது.

    வளிமண்டல அழுத்தத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்: வளிமண்டல அழுத்தத்தில் ஏற்படும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள், பிராந்திய கடல் மட்டத்தில் தற்காலிக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, கடல் நீரை கரையிலிருந்து விலகிச் செல்லச் செய்யக்கூடும்.

    மிகக் குறைந்த அலைநிலை (Low Tide): வானிலை காரணிகளால் ஏற்பட்ட இந்த விளைவுகள் இயற்கையாக ஏற்பட்ட குறைந்த அலைநிலையுடன் இணைந்ததால், கடல் பின்வாங்கிய காட்சி மேலும் அதிகமாகத் தோன்றியது.

    வானிலை சார்ந்த காரணிகளால் கடல் நீர் கரையிலிருந்து விலகிச் செல்லும் இத்தகைய நிகழ்வு அறிவியல் ரீதியாக “Wind Setdown” அல்லது “Meteorological Low Tide” என அழைக்கப்படுகிறது. இது புயல் அலை (Storm Surge) நிகழ்வுக்கு நேர்மாறானதாகும். புயல் அலை ஏற்படும்போது பலத்த காற்று கடல் நீரை நிலப்பகுதியை நோக்கித் தள்ளும். ஆனால் இந்த நிகழ்வு அதற்கு நேர்மாறாக இடம்பெற்ற ஒரு நிகழ்வாகும்.

    இது சுனாமிக்கான அறிகுறியா?

    கடல் திடீரென பின்வாங்கும்போது, இது சுனாமி வருவதற்கான எச்சரிக்கை அறிகுறி என்று பலர் கருதுகின்றனர். இருப்பினும், சுனாமி பொதுவாக கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கங்கள் அல்லது நிலச்சரிவுகள் போன்ற நிகழ்வுகளால் உருவாகின்றன. இத்தகைய சந்தர்ப்பங்களில், பேரழிவை ஏற்படுத்தக்கூடிய சுனாமி அலை வருவதற்கு முன்பாக கடல் நீர் சில நிமிடங்களில் வேகமாகப் பின்வாங்கக்கூடும்.Link

    ஆனால் மார் டெல் பிளாட்டாவில் இடம்பெற்ற நிகழ்வு, பல மணி நேரம் நீடித்த காற்று மற்றும் வானிலை நிலைமைகளால் ஏற்பட்டதாகும். இது சுனாமி அபாயத்திற்கான அறிகுறியாகக் கருதப்படவில்லை என விஞ்ஞானிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது.Link

    இதேபோன்ற வானிலை சார்ந்த நிகழ்வுகள் உலகின் பிற பகுதிகளிலும் பதிவாகியுள்ளன. உதாரணமாக, சக்திவாய்ந்த புயல்கள் சில ஆழம் குறைந்த கடல் விரிகுடாக்களில் உள்ள நீரை தற்காலிகமாக வெகுதூரம் பின்வாங்கச் செய்யக்கூடும்.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில், ஆர்ஜன்டீனாவில் கடல் நீர் வற்றியதாக பகிரப்படும் தகவலானது தவறானதாகும். இந்த அசாதாரணமான கடல் பின்வாங்கலின் காரணமாக, வழக்கமாக கடல்நீருக்கு அடியில் காணப்படும் மணற்பரப்புகள் மற்றும் பாறைப் பகுதிகள் வெளிப்பட்டன. ஆனால் இது நிலப்பகுதியில் இருந்து கடலை நோக்கி வீசிய மிக சக்திவாய்ந்த பலத்த காற்று, கடலோர நீரை ஆழ்கடலை நோக்கி தள்ளியதன் காரணமாக ஏற்பட்ட நிலையாகும்,   இதன்போது அப்பகுதியில் ஏற்பட்ட திடீர் வளிமண்டல அழுத்தக் குறைவும் (Drop in atmospheric pressure) கடல் நீர் தற்காலிகமாக பின்வாங்க முக்கியக் காரணமாக அமைந்தது. வானிலை   காரணமாக ஏற்பட்ட இந்த நிகழ்வு தற்காலிகமானது என்பதுடன், குறுகிய காலத்திலேயே அந்த நிலை முடிவடைந்து, கடல் மீண்டும் இயல்பான மட்டத்திற்குத் திரும்பியது என்பதுவும் சர்வதேச ஊடக அறிக்கைகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டது.


    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: ஆர்ஜன்டீனாவில் கடல் பின் வாங்கியமைக்கான உண்மையான காரணம் என்ன?

    Fact Check By: Suji Shabeedharan

    Result: Missing context

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-09-14

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.