Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    ஆகஸ்ட் 2 ஆம் திகதி சூரிய கிரகணம் தொடர்பான உண்மை என்ன?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-08-07
    4 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    2025 ஆகஸ்ட் 02 ஆம் திகதி நிகழ்ந்த சூரிய கிரகணத்தினால் உலகம் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. எனவே இது குறித்த உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவ

    2025 ஆகஸ்ட் 02 ஆம் திகதி நிகழ்ந்த சூரிய கிரகணத்தினால் உலகம் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

    எனவே இது குறித்த உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link

    குறித்த பதிவில் சூரிய கிரகணம்!

    2025 ஆகஸ்ட் 2 ஆம் திகதி உலகம் 6 நிமிடங்கள் இருளில் மூழ்கும் எனவும் 100 ஆண்டுகளுக்கு நாம் மீண்டும் பார்க்க முடியாத சூரிய கிரகணம் நிகழும் என  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டு கடந்த 2025.07.23 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிரந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    மேற்குறிப்பிட்ட பதிவின் படி குறித்த சூரிய கிரகணமானது கடந்த 2 ஆம் திகதியே இடம்பெற்றிருக்க வேண்டும் அவ்வாறாயின் அது குறித்த செய்திகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியிருக்க வேண்டும், எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை என்பது உறுதியானது.

    மேலும் Times of India வில் வெளியான செய்தியின் படி , 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதியன்று முழுமையான அல்லது பகுதியளவிலான எந்த கிரகணங்களும் நிகழவில்லை என நாசா மற்றும் பல வானியல் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். 

    அத்துடன் குறித்த பதிவில் குறிப்பிட்ட திகதி தற்போது கடந்து விட்டது, மேலும் அந்த திகதியில் உலகில் எங்கும் சூரிய கிரகணம் தென்படவில்லை, ஆகவே இந்த கூற்று முற்றிலும் ஆதாரமற்றது என்பதுடன்அறிவியல் ரீதியாக தவறானது என்பதையும் வலுப்படுத்துகிறது.

    நாசாவால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ கிரகண நாட்காட்டி 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதியன்றோ அல்லது அதனை அடுத்த தினங்களில் கூட முழுமையான அல்லது பகுதியளவிலான சூரிய கிரகணம் ஏற்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

    அதன்படி உண்மையில், 2025 இல் நிகழும் ஒரே சூரிய கிரகணம் செப்டம்பர் 21 அன்றே நிகழவுள்ளதாக நாசாவின் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த கிரகணமானது ஒரு பகுதியளவிலான கிரகணமாக  இருக்கும் எனவும் இது தெற்கு பசிபிக், நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகாவின் சில பகுதிகளில் உள்ளவர்களுக்கு மாத்திரமே தென்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    2020களுக்கான நாசாவின் அதிகாரப்பூர்வ கிரகண அட்டவணையை நீங்கள் இங்கே காணலாம்.

    100 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாத்திரமே நிகழும் முழு சூரிய கிரகணம்

    மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப்பதிவில் ஆகஸ்ட் 02 ஆம் திகதி நிகழும் சூரிய கிரகணம் ஆனது 100  ஆண்டுகளுக்கு ஒரு முறையே நிகழும் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே நாம் அது தொடர்பிலும் ஆராய்ந்தோம்.

    அதன்போது குறித்த சூரிய கிரகணமானது ஆகஸ்ட் 2 ஆம் திகதி நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட கூற்று தவறு எனினும் உண்மையில் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சூரிய கிரகணமானது 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 02 ஆம் திகதி நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.NASA

    இந்த முழு சூரிய கிரகணமும் கிட்டத்தட்ட ஆறு நிமிடங்கள் வரை வானத்தையும் பூமியின் சில பகுதிகளையும் இருளாக்கும். இது போன்ற கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பிறகுதான் மீண்டும் நிகழும். இந்த அரிதான சூரிய கிரகணம், பல கண்டங்களில் தெரியும்.

    மேலும் இது போன்ற கிரகணம் 2114ஆம் ஆண்டு வரை மீண்டும் நிகழாது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த சூரியகிரகணம் ஆகஸ்ட் 2ஆம் தேதி 2027ஆம் ஆண்டு திங்கட்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது.

    தெற்கு ஸ்பெயினில், உள்ளூர் நேரப்படி மதியம் 1:30 முதல் 2:00 வரை முழுமை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிபியா மற்றும் எகிப்து போன்ற வட ஆபிரிக்காவில், கிரகணம் உள்ளூர் நேரப்படி (EET) மதியம் 2:00 முதல் 2:30 வரை உச்சத்தில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    சவுதி அரேபியாவில், கிரகணம் உள்ளூர் நேரப்படி (AST) சுமார் 3:00 மணிக்கு முழுமையடையும். இந்தியாவில் இந்த முழு சூரிய கிரகணம் இருக்காது. பகுதி சூரிய கிரகணமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. Link

    எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok| Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி எந்தவொரு சூரிய கிரகணமும் நிகழவில்லை என்பதுடன்  100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் முழு சூரிய கிரகணமானது 2027 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 02 ஆம் திகதியே நிகழவுள்ளமை நாசா வெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி கண்டறியப்பட்டுள்ளது.

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

    Avatar

    Title:ஆகஸ்ட் 2 ஆம் திகதி சூரிய கிரகணம் தொடர்பான உண்மை என்ன?

    Fact Check By: Suji Shabeedharan 

    Result:Partly False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-08-07

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.