Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ஐ போன் வாங்கித்தர மறுத்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தின் உண்மை பின்னணி என்ன?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-08-26
    7 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO  ஐ போன் வாங்கித் தருவதற்கு பெற்றோர் மறுத்ததால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் மலைச் சரிவிலிருந்து கீழே குதித்து உயிரிழந்ததாகவும், அவரைக் காப்பாற்றச் சென்றபோது அவரது பெற்றோரும் மலை உச்சியிலிருந்து கீழே வீழ்ந்ததாக காணொளி மற்

    Subscribe to our WhatsApp Channel

    INTRO 

    ஐ போன் வாங்கித் தருவதற்கு பெற்றோர் மறுத்ததால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் மலைச் சரிவிலிருந்து கீழே குதித்து உயிரிழந்ததாகவும், அவரைக் காப்பாற்றச் சென்றபோது அவரது பெற்றோரும் மலை உச்சியிலிருந்து கீழே வீழ்ந்ததாக காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

    எனவே இந்த சம்பவத்தின் உண்மைத் தன்மையை கண்டறிய அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. 

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link

    குறித்த பதிவில் ஐ-போன் வாங்கித் தராததால் ஏற்பட்ட சோக சம்பவம் – ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழப்பு..

    இந்தியா – மகாராஷ்டிரா: சத்ரபதி சம்பாஜிநகர் (ஔரங்காபாத்) பகுதியில் ஐ-போன் வாங்கித் தருமாறு குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 19 வயது இளைஞர், மலையுச்சிக்குச் சென்று தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

    சம்பவ இடத்துக்குச் சென்ற பெற்றோர், பொலிஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி இளைஞரை சமாதானப்படுத்த முயன்றனர்.

    அப்போது தந்தை மகனைத் தடுக்க அருகில் சென்ற நிலையில், இளைஞர் மலையிலிருந்து கீழே விழுந்ததாகவும், அவரைக் காப்பாற்ற முயன்ற தந்தையும் தவறி விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

    கணவன் மற்றும் மகன் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாயும் மலையிலிருந்து குதித்து உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் 19 வயது மகன் என மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது… என தெரிவிக்கப்பட்ட இந்த பதிவானது, கடந்த 2026.08.24 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.

    மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

    FB | FB

    Fact Check (உண்மை அறிவோம்)

    மேற்கண்டவாறு பகிரப்பட்டு வரும் காணொளியில், இளைஞர் ஒருவர் பள்ளத்தாக்கின் விளிம்பில் நிற்பதையும், அவருக்கு அருகில் மேலும் சிலர் இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. பின்னர் இருவர் பள்ளத்தாக்கிலிருந்து கீழே விழுவதும், அதனைத் தொடர்ந்து இரண்டு விநாடிகளுக்குப் பிறகு மேலும் ஒருவர் கீழே விழுவதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

    குறித்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற சம்பவம் இந்தியாவில் உண்மையில் இடம்பெற்றுள்ளதா என்பதையும், அவ்வாறு இடம்பெற்றிருந்தால் இந்தியாவின் பிரதான ஊடகங்கள் மற்றும் ஏனைய அதிகாரப்பூர்வ நம்பகமான ஆதாரங்கள் அது தொடர்பில் எவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளன என்பதையும் நாங்கள் ஆய்வு செய்தோம்.

    சம்பவத்தின் பின்னணி மற்றும் காரணம் தொடர்பான ஆரம்ப ஊடக அறிக்கைகள்

    இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திற்குட்பட்ட திஸ்காவ் பகுதியில் அமைந்துள்ள கவ்வாடியா டொங்கர் மலைப்பகுதியிலிருந்து தவறி விழுந்து, 2026 ஆகஸ்ட் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை 18 வயதான குணால் சந்த்குடே, அவரது தந்தையான முரளிதர் மற்றும் தாயான சங்கீதா ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் பிரதான ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின்படி, 18 வயதான குணால் சந்த்குடே வாங்கியிருந்த ஐபோன் கையடக்கத் தொலைபேசியின் தவணைத் பணத்தை செலுத்துவது தொடர்பாக அவரது தந்தையுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் பின்னர் அவர் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    மேற்குறிப்பிட்ட ஊடக அறிக்கைகளை இங்கே காணலாம்

    பொலிஸ் விசாரணைகளுக்குப் பின்னர் வெளியான ஊடக அறிக்கைகள்

    எவ்வாறாயினும், பின்னர் Times of India உள்ளிட்ட பிரதான ஊடகங்கள், பொலிஸ் தரப்பை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்திகளின்படி, இந்த சம்பவத்திற்கான உண்மையான காரணம் ஐபோன் கையடக்கத் தொலைபேசி தொடர்பான தகராறு அல்ல என்றும், அந்தக் குடும்பத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த குடும்பப் பிரச்சினைகள் மற்றும் தாய், தந்தைக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை சுமார் 10 மணியளவில் குணால் குறித்த மலைப்பகுதிக்குச் சென்று, தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தனது பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர், குடும்ப நண்பர் மற்றும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, சுமார் இரண்டு மணி நேரம் அவரைக் காப்பாற்ற முயற்சித்துள்ளனர். குணால் மீண்டும் திரும்பி வருவதற்கு சம்மதிப்பது போல் தெரிந்த தருணத்தில், அவரது தந்தையான முரளிதர் பின்னால் இருந்து சென்று அவரைப் பிடித்து இழுக்க முயற்சித்துள்ளார். இதன்போது குணாலின் சமநிலை தவறி அவர் பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற அவரது தந்தையும் அவருடன் சேர்ந்து கீழே வீழ்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அவரது தாயும் பள்ளத்தாக்கிலிருந்து கீழே குதித்துள்ளார். மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    ஊடக அறிக்கைகளின்படி, இந்த இளைஞரின் தாயான சங்கீதா முரளிதர் சந்த்குடே, தனது எந்தவொரு கோரிக்கையையும் மகன் ஏற்றுக்கொள்ளாததால் கடும் மனவேதனைக்கு உள்ளாகியிருந்தார். இதன்போது, இந்திய கலாசாரத்தில் திருமணமான பெண்ணின் முக்கியமான அடையாளமாகக் கருதப்படும் தாளியை கழற்றிவிட்டு, தனது கணவரை விட்டுப் பிரிந்து அவருடன் இருப்பதாக மகனிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    குணால் மற்றும் அவரது தாயார் இருவரும் ஏற்கனவே ஐபோன் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வந்ததாகவும் ஊடக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொலைபேசிகள் மாதாந்த தவணை முறையில் வாங்கப்பட்டவையா, அவற்றுக்கான தவணைகளைச் செலுத்துவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தனவா என்பது தொடர்பில் பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எவ்வாறாயினும், இந்த இளைஞர் கடந்த 2025ஆம் ஆண்டிலும், தனக்கு தொலைபேசி ஒன்றை வாங்கித் தருமாறு கோரி இதே மலைப்பகுதிக்கு வந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டியதாகவும், அப்போது பொலிஸார் தலையிட்டு அவரைக் காப்பாற்றியதாகவும் குறித்த ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    ஊடக அறிக்கைகளை இங்கே காணலாம் மற்றும் இங்கே காணலாம்.

    தாய் முன்னர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்த காணொளிகள்

    குறித்த தாய் முன்னர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்த சில காணொளிகளில், குடும்பத் தகராறுகள் மற்றும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பில் தனது கருத்துகளைப் பகிர்ந்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    தாய் முன்னர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்த காணொளிகள் தொடர்பிலும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதில் அவர் குடும்பத் தகராறுகள், உறவினர்களிடமிருந்து ஏற்பட்ட அழுத்தங்கள் மற்றும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் குறித்து கருத்துகளைத் தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காணொளிகளும் பொலிஸ் விசாரணையின் ஒரு பகுதியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

    சத்ரபதி சம்பாஜிநகர் பொலிஸ் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் ஆணையாளர்

    இது தொடர்பில் பொலிஸார் தெரிவித்ததாவது, குறித்த இளைஞர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அவரை சமாதானப்படுத்தி காப்பாற்றுவதற்கு அவரது பெற்றோர், பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் கடுமையாக முயற்சித்த போதிலும், துரதிர்ஷ்டவசமாக அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தற்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எந்தவொரு உறுப்பினரும் உயிருடன் இல்லாத காரணத்தால், இந்தச் சம்பவத்திற்கான உண்மையான காரணத்தைத் தெளிவுபடுத்தக்கூடிய நேரடி சாட்சியாளர் எவரும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, ஐபோன் கையடக்கத் தொலைபேசி காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் தகவல் உண்மையானது அல்ல என்றும், எனவே சமூக ஊடகங்கள் ஊடாக ஆதாரமற்ற மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இந்த சம்பவம் தொடர்பில் தெரிவித்த கருத்துகள்

    உயிரிழந்த தாய் சங்கீதாவின் சகோதரியான பல்லவி பாட்டில் சமூக ஊடகங்களில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார். அதில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஐபோன் தொடர்பான தகவல் உண்மையல்ல என்றும், குடும்பத்தின் உண்மையான நிலைமை குறித்து அறியாமல் இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவதை நிறுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார். அவரது முழுமையான கருத்தை இங்கே காணலாம்.

    உயிரிழந்த இளைஞரின் தாத்தாவான பபன்ராவ் பாட்டில் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது, இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலை முயற்சி அல்ல என்பதாகும். குடும்பத்தில் நிலவிய கடுமையான மன அழுத்தத்தால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் மத்தியில், மலையின் உச்சியில் இருந்த அவருடன் தொடர்புகொண்டு பேசுவதற்கு முயற்சித்தபோது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தாகவே இதை தாங்கள் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த ஊடக அறிக்கையை இங்கே காணலாம்.

    இது தொடர்பில் நாங்கள் எமது Fact Crescendo இந்தியக் குழுவிடமும் விசாரித்தோம். இதன்போது, அவர் தற்கொலை செய்துகொள்ள முயன்றதற்கான அடிப்படைக் காரணம் இதுவரை தெளிவாக உறுதிப்படுத்தப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், பொலிஸார், உறவினர்கள் மற்றும் சில நண்பர்கள், இந்தச் சம்பவம் ஐபோன் கையடக்கத் தொலைபேசி காரணமாக இடம்பெற்றதாகக் கூறப்படும் கருத்துகளை நிராகரித்துள்ளனர். ஏனெனில், அந்த நேரத்திலேயே குறித்த இளைஞரிடம் ஐபோன் ஒன்று இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சம்பவத்திற்கான அதிக சாத்தியமான காரணம் குடும்பத் தகராறாக இருக்கலாம் எனத் தோன்றுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். எனினும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் உயிரிழந்துள்ளதால், சம்பவத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்துவது கடினமாகியுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

    நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் இதுபோன்ற மனநிலையில் இருந்தால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள இலவச உதவிச் சேவைகளை உடனடியாகத் தொடர்புகொள்ளுங்கள்:

    இலங்கை சுமித்ரயோ (Sri Lanka Sumithrayo):

    தொலைபேசி இலக்கங்கள்: 011-2692909 / 011-2696666

    இணையதளம்: www.sumithrayo.org

    தேசிய மனநல உதவி தொலைபேசி சேவை (National Mental Health Helpline):

    குறுந்தொலைபேசி இலக்கம்: 1926

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில், ஐபோன் கையடக்கத் தொலைபேசி ஒன்றைக் கேட்டும் அதனை வாங்கிக் கொடுக்காததால், இந்திய இளைஞர் ஒருவர் மலைச் சரிவிலிருந்து கீழே குதித்து உயிரிழந்ததாகப் பகிரப்படும் பதிவுகள் தவறாக வழிநடத்தக்கூடியவை என்பது தெரியவந்துள்ளது. பிரதான ஊடகங்கள், பொலிஸ் தரப்பின் கருத்துகளை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்திகளின்படி, இந்தச் சம்பவத்திற்கான உண்மையான காரணம் ஐபோன் தொலைபேசி தொடர்பான தகராறு அல்ல என்றும், அந்தக் குடும்பத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த குடும்பப் பிரச்சினைகள் மற்றும் தாய், தந்தைக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொலிஸார் தெரிவித்துள்ளபடி, உயிரிழந்த தாய் மற்றும் மகன் இருவரும் ஐபோன்களையே பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. அந்தத் தொலைபேசிகள் மாதாந்த தவணை முறையில் வாங்கப்பட்டவையா, அவற்றுக்கான தவணைகளைச் செலுத்துவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தனவா என்பதை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உயிரிழந்த சங்கீதாவின் சகோதரி உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள், இந்தச் சம்பவம் ஐபோன் தவணை தொடர்பான பிரச்சினையால் இடம்பெற்றதாகப் பரவி வரும் தகவல்கள் ஆதாரமற்ற வதந்திகள் என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். குடும்பத்தில் நிலவி வந்த ஏனைய மன அழுத்தங்கள் மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளை மறைத்து, சமூக ஊடகங்கள் இந்தத் தொலைபேசி தொடர்பான கதையைத் தேவையற்ற வகையில் பரப்பி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    எவ்வாறாயினும், இந்த இளைஞர் கடந்த 2025ஆம் ஆண்டில், தனக்கு தொலைபேசி ஒன்றை வாங்கித் தருமாறு கோரி இதே மலைப்பகுதிக்கு வந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டியதாகவும், அப்போது பொலிஸார் தலையிட்டு அவரைக் காப்பாற்றியதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: ஐ போன் வாங்கித்தர மறுத்ததால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தின் உண்மை பின்னணி என்ன?

    Fact Check By: Suji Shabeedharan

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-08-26

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.