
INTRO
சோயா மீட் செய்யும் தொழிற்சாலையில் எவ்வாறு சோயா மீட் செய்கின்றார்கள் என தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்கில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
இந்த காணொளி உண்மையா என்பது தொடர்பில் வாசகர்களிடம் இருந்து வந்த கோரிக்கைக்கு அமைய இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சோயா (Meal Maker) சாப்பிடுபவர்கள் இந்த காணொளியைப் பார்த்தால் இனி அதை சாப்பிடவே தயங்குவார்கள் என்று கூறி, சோயா சாப் தயாரிக்கும் தொழிற்சாலையைச் சேர்ந்ததாகக் கூறப்படும் ஒரு காணொளி சமூக இந்தியாவிலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தது.
வைரலாகும் காணொளியில், ஒரு தொழிற்சாலையில் சோயா மாவு தரையில் பரப்பப்பட்டிருப்பதுடன், சட்டையில்லாத ஒருவர் அதன் மீது படுத்திருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளப் பயனர்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்தக் காணொளி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், கௌதம் புத்த நகர் மாவட்டத்தின் தலைநகர் நொய்டா செக்டர் 27-ல் உள்ள ஒரு உணவு தயாரிப்பு நிலையத்தில் எடுக்கப்பட்டது என்றும், அங்கு சமீபத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.
எனவே நாம் இந்த காணொளி தொடர்பில் ஆராய்ந்த போது, நொய்டாவில் சுகாதாரமற்ற சூழலில் சோயா மீட் தயாரிக்கும் தொழிற்சாலையை காண்பிப்பதாகக் கூறப்படும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தில்லிக்கு அருகில் அமைந்துள்ள கௌதம் புத்த நகர் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாகவும், ஆனால், அந்தத் தொழிற்சாலைக்கும் நொய்டாவில் (கௌதம் புத்த நகர் மாவட்டத்தின் தலைநகர்) அமைந்துள்ள உணவு தாயரிப்பு நிலையத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், India Today வெளியிட்டிருந்தது.
மேலும், இதே காணொளி ஏற்கனவே அலிகார் மற்றும் ஆக்ராவில் எடுக்கப்பட்டதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்ததுடன் இந்த வைரலான காணொளி கௌதம் புத்த நகர் பகுதியில் எடுக்கப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்பதுவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இந்தக் காணொளி எப்போது, எங்கு பதிவு செய்யப்பட்டது என்பதை எந்தவொரு அதிகாரப்பூர்வ நிறுவனமும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என பல இந்திய பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிந்தன. Link | Link
இந்த காணொளி தொடர்பான மேலதிக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அறிவதற்காக எமது ஃபேக்ட் கிரஸண்டோ இந்திய கிளையின் ஊடாக, இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளோம். எனவே அவர்களிடம் இருந்து உரிய தகவல்கள் கிடைத்தவுடன் நாம் இந்த கட்டுரையில் அதனை இணைக்க காத்திருக்கின்றோம்.
சோயா மீட் தயாரிப்பு முறை
- சோயாபீன்கள் சுத்தம் செய்யப்படுகின்றன
சோயாபீன்களில் உள்ள தூசி, கற்கள் மற்றும் பிற வெளிப்பொருட்கள் முதலில் நீக்கப்படுகின்றன. - சோயாபீன்களின் தோல் நீக்கப்படுகிறது
சோயாபீன்களின் வெளிப்புற தோல் (hull) பிரிக்கப்பட்டு, உள்ளிருக்கும் பகுதி அடுத்தகட்ட செயல்முறைக்கு அனுப்பப்படுகிறது. - எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது
சோயாபீன்களிலிருந்து சோயா எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இதன் பின்னர் மீதமிருக்கும் பொருளில் அதிக அளவு சோயா புரதம் காணப்படும். - சோயா மாவு தயாரிக்கப்படுகிறது
எண்ணெய் நீக்கப்பட்ட சோயா பொருள் நன்றாக அரைக்கப்பட்டு defatted soy flour எனப்படும் மாவாக மாற்றப்படுகிறது. - மாவு மற்றும் தண்ணீர் கலக்கப்படுகின்றன
இந்த சோயா மாவு குறிப்பிட்ட அளவு தண்ணீருடன் கலந்து, தொழிற்சாலை இயந்திரத்தில் செலுத்தப்படுகிறது. - Extrusion செயல்முறை நடைபெறுகிறது
இதுதான் சோயா மீட் தயாரிப்பின் முக்கிய கட்டமாகும். சோயா கலவை அதிக வெப்பம், அழுத்தம் மற்றும் இயந்திர இயக்கத்தின் மூலம் extruder-க்குள் செயலாக்கப்படுகிறது. இதனால் சோயா புரதத்தின் அமைப்பு மாறி, நார்ச்சத்து போன்ற அமைப்பு உருவாகிறது. - வடிவம் கொடுக்கப்படுகிறது
Extruder-இலிருந்து வெளியே வரும் பொருள் தேவைக்கேற்ப சோயா சங்ஸ், சோயா கிரான்யூல்ஸ், சோயா சாப் போன்ற பல்வேறு வடிவங்களில் வெட்டப்படுகிறது. - உலர்த்தப்படுகிறது
புதிதாக உருவாக்கப்பட்ட சோயா துண்டுகளில் அதிக ஈரப்பதம் இருக்கும். அவை தொழில்துறை drying equipment மூலம் உலர்த்தப்பட்டு, நீண்ட காலம் சேமிக்கக்கூடிய வகையில் மாற்றப்படுகின்றன. - தரப் பரிசோதனை மற்றும் பொதியிடல்
இறுதியாக தயாரிப்பு தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, எடை போடப்பட்டு, பொதியிடப்பட்டு சந்தைக்கு அனுப்பப்படுகிறது.Link
சுருக்கமாக:
சோயாபீன் → எண்ணெய் பிரித்தல் → Defatted Soy Flour → தண்ணீர் கலத்தல் → Extrusion → வடிவமைத்தல் → உலர்த்துதல் → பொதியிடுதல் → சோயா மீட்
குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் காணப்படும் சில வைரல் தொழிற்சாலை காணொளிகளில் காட்டப்படும் தரையில் மாவு பரப்புதல் போன்ற செயல்கள், சோயா மீட் தயாரிப்பதற்கான வழக்கமான தொழில்துறை செயல்முறை அல்ல.Link
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
ஆகவே மேற்குறிப்பிட்ட எமது ஆய்வுகளின் அடிப்படையில் இந்த காணொளி உண்மையில் சோயா மீட் தயாரிக்கும் போது இடம்பெற்ற நிகழ்வா என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. மேலும் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தில்லிக்கு அருகில் அமைந்துள்ள கௌதம் புத்த நகர் உணவுத்துறை அதிகாரிகள் அது குறித்து ஆய்வு மேற்கொண்டதாகவும், ஆனால், அந்த காணொளயில் உள்ள தொழிற்சாலைக்கும், நொய்டாவில் (கௌதம் புத்த நகர் மாவட்டத்தின் தலைநகர்) அமைந்துள்ள உணவு தாயரிப்பு நிலையத்திற்கும் தொடர்பு இருப்பதற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



